புயலுக்குப் பின்னர் 4,800 மண்சரிவுகள்!

‘டித்வா’ புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். நேற்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். ‘டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக […]

பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

கூரிய ஆயுதத்தால் பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். நேற்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். எனினும், குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதுடன், அதன் செலுத்துனர் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றபோது, […]