குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நவம்பர் 14ஆம் திகதியன்று பொரளை பகுதியில் ஒரு பெண்ணை வாளால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். T56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகள், 10 […]
இலங்கை – தமிழக மீனவர் பிரச்சினை இந்திய பிரதமருக்கு அனுப்படும் கடிதங்கள் தொடர்பில் அன்னராசா காட்டம்

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(12.01.2026) யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதால் வடமராட்சி […]
லொறி விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம்(11.01.2026) 6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞர், சிகிச்சை […]
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த வருகையில் 17.0 சதவீதமாகும். அத்துடன், இந்த ஆண்டின் முதல் சில நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,425 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பேரும், ஜேர்மனியிலிருந்து 5,306 பேரும் […]
இலஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் மீண்டும் விளக்கமறியலில்
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதன்போது நீதிமன்றில் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த […]
நிக்கவெவ பிரதேசத்தில் விபத்து: ஒருவர் பலி
அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் முச்சக்கரவண்டி வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேகாலை சிறுவனின் மர்ம மரணம்: சடலம் தோண்டி எடுப்பு

கேகாலை, தெரணியகலை – நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரி தோட்டத்தில் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி உயிரிழந்த 14 வயது சிறுவனின் மரணத்தில் நிலவும் மர்மம் காரணமாக, அவிசாவளை நீதவான் பிரமோத் ஜயசேகர முன்னிலையில் நேற்று (12) அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 2 ஆம் திகதி குறித்த சிறுவன் தனது தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக நூரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் […]
பாரம்பரிய மருத்துவ உதவிகளை வழங்கிய யுவதி மர்ம நோயால் மரணம்

களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார். தனது 6 வயதிலேயே பாம்பு விஷம் நீக்கும் பாரம்பரிய மருத்துவ முறையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார். 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தனது தாத்தாவிடம் இருந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட சந்துனி, தந்தையை விடவும் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார். […]
மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்

மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் வலை பயிற்சிகளுக்கான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் தற்பொழுது இலங்கை மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணியின் வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் பொஸ்கோனியன்ஸ் […]
வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய […]