ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 32,537 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 1018 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 713 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 530 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 502 […]

ஜனாதிபதி தலைமையில் ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ அங்குரார்ப்பணம்

‘Rebuilding Sri Lanka’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் ஆரம்பமாகியுள்ளது. உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளிஅனர்த்தத்திற்குப் பின்னரான […]

ராமேஸ்வரம் மீன்பிடி எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிக்க நடவடிக்கை

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார். “நெல் விலை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் விடயங்களை முன்வைத்துள்ளோம். குறிப்பாக நாடு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து […]

நுண்நிதி, கடன்; அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் கருத்துக் கோரல்

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் கருத்து கோரல் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துகள் கேட்டறியப்பட்டன. இங்கு கருத்துத் […]

பாராளுமன்ற வளாகம் தொடர்பாக சபாநாயகர் கூறியதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை

பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள், மதுபானம் மற்றும் சிகரெட் பாவிக்கும் ஊழியர்கள் குழுவிற்கு எதிராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம், குறித்த போலிச் செய்தி எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி வெளியிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அத்தகைய ஊழியர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பாராளுமன்றத்தின் […]

எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு

சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் […]

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு

யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றையதினம் கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு செய்துள்ளார். ஒரு சில நிமிடங்களின் பின்பு […]

கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு; முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்ட துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் திங்கட்கிழமை (12) நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரியிருந்தார். குறிப்பாக கடந்த புதன்கிழமை (07) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் […]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது சேவையை நிறைவு செய்யும் ஜூலி சாங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து […]