மேன்முறையீடு செய்யலாம்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12ம் திகதி முதல் 2026.01.25ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான http://www.moe.gov.lk இனுள் பிரவேசித்து 3 பாடசாலைகளுக்கு (ஆகக் கூடியது) மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் http://http://g6application.moe.gov.lk/#/எனும் இணைப்பினூடாக நேரடியாக மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.

பணியிடங்களை குறைக்க ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா திட்டம்!

  ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், இந்த வாரத்திலேயே 100 உடனடி பணியிடக் குறைப்புகள் இடம்பெறுகின்றன. இந்த வாரம் பணியாளர் ஒழுங்குமுறை (Workforce Adjustment) காலகட்டத்துக்குள் நுழைவதை அந்த கூட்டாட்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 850 பணியிடங்களும், அதன் நிர்வாகக் குழுவின் 12 சதவீதமும் பாதிக்கப்படும். “பாதிக்கப்படும் மற்றும் அதிகப்படியான (surplus) பணியாளர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா அறிவிப்புகளை வழங்கும். இந்த நடைமுறை, […]

பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு. குறித்த முற்பணம் வட்டியின்றி 08 மாதத் தவணைகளாக அல்லது அதற்கு முன்னரோ அறவிடுவதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அப்பண்டிகை முற்பணத்தை 15,000/- ரூபாவாக அதிகரித்து வழங்குவதற்கு […]

ஸ்கெலிட்டன் தகுதிப்போட்டி; அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கனடா மறுப்பு

ஒலிம்பிக் இடங்களை பாதுகாப்பதற்காக ஸ்கெலிட்டன் தகுதிப்போட்டியை முன்கூட்டியே அமைத்ததாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கனடா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது ஐந்து முறை அமெரிக்க ஒலிம்பியனான கேட்டி உலாண்டர், கனடிய பயிற்சியாளர் ஒருவர் ஒரு வீரரை போட்டியிலிருந்து விலக்கினார் என குற்றம்சாட்டியுள்ளார். ஸ்கெலிட்டன் விளையாட்டுக்கான கனடிய சம்மேளனம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு சர்வதேச போட்டியிலிருந்து சில வீரர்களை விலக்க எடுத்த முடிவை பாதுகாத்துள்ளது. இந்த முடிவு, தன்னுடைய ஆறாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை சிதைத்ததாக முன்னாள் அமெரிக்க […]

கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது, “ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதில் […]

க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்கு இந்தோனேசியாவில் தடை

இந்தோனேசியாவில் க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, க்ரொக் செயற்கை நுண்ணறிவு தளத்தை தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்துடன் இணைந்து க்ரொக் செயற்கை நுண்ணறிவு சேவை இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரொக், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது சட்டம், கலாசார […]

ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம்

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “இனப்படுகொலை கொள்கைகள்” மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது. மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார […]

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப்

ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கும் ஈரானிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், இது இறுதியானது எனவும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானுடன் எந்தவிதமான வர்த்தகம் செய்தாலும், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு […]

 இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்குகிறது அமெரிக்கா!

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை (13) அறிவித்தது. இதன் மூலம் டிட்வா சூறாவளி நிவாரணத்திற்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூறாவளி கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களிற்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி […]

இன்று கிழக்கு மாகாண அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (13) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பாளரை பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவிக்கு வேறொருவரை நியமிக்கக்கோரி இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் 113 முதன்மை வைத்திய நிறுவனங்களில் […]