மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு எதிரான அவதூறுகள்; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேரர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (13) பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேரர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து பௌத்த மதகுருமார்களைக் குறிவைத்து இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகக் குற்றம் […]

வெளியேற்றப்பட்டது பரிஸ் ஸா ஜெர்மைன்

பிரெஞ்சுக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது. தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் பரிஸ் கால்பந்தாட்டக் கழகத்தை எதிர்கொண்ட பரிஸ் ஸா ஜெர்மைன் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியது. பரிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொனதன் இகொனே பெற்றிருந்தார்.

சிறுப்பிட்டியைச் சேர்ந்த குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம்(12) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் லதா என்ற 42 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், இதயம் செயலிழப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது சடலம் […]

விவசாய அமைச்சர் லால்காந்த பௌத்த மதத்தை இழிவுபடுத்துகின்றார் – நாமல் ராஜபக்ச

விவசாய அமைச்சர் லால்காந்த பௌத்தமதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை நாயக்க தேரரை இழி சொல் கொண்டு அழைத்து அவமதித்துள்ளதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறு ஒரு பௌத்த மத தலைவரை அவமதிப்பதை தாம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். ICCPR சட்டத்தின் படி, […]

கனடாவின் புதிய உணவுப் பொருள் லேபிள் அமைப்பு மிகவும் பயனுள்ளது – நிபுணர் கருத்து

கனடாவில் விற்பனை செய்யப்படும் சில மளிகைப் பொருட்களில், நுகர்வோர் தங்களின் உணவுச் சார்ந்த தேர்வுகளை மேலும் அறிவுப்பூர்வமாக மேற்கொள்ள உதவும் வகையில், இனி கட்டாய எச்சரிக்கை லேபிள்கள் இடம்பெறவுள்ளன. ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த லேபிள்கள், பொருட்களில் அதிக அளவில் திட கொழுப்பு (saturated fat), சோடியம் அல்லது சர்க்கரை உள்ளதா என்பதைத் தெரிவிக்கும் வகையில், பொட்டலத்தின் முன்புறத்தில் தெளிவாகக் காணப்படும் கருப்பு-வெள்ளை எச்சரிக்கைச் சின்னங்களைக் கொண்டுள்ளன. ஹெல்த் கனடா தெரிவிப்பதாவது, இவ்வகை கூறுகள் […]

கடுமையான சட்ட நடவடிக்கைகள்; ஊர்காவற்துறை பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊர்காவற்துறை பிரதேசசபை ஆளுகைக்குள் பொலித்தீன் மற்றும் லஞ்சீட் பாவனை அவதானிக்கப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊர்காவற்துறை பிரதேசசபையின் தவிசாளர் அ.அன்னராசா எச்சரித்துள்ளார். இந்த விடயமானது கடந்த 01.01.2026 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரது இணைந்த ஊடக சந்திப்பு நேற்றைய தினம் (12.01.2026) பிரதேசசபையில் நடைபெற்றது. இதன்போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]

கோப்பாயில் பஸ் தரிப்பு நிலையத்திற்குள் புகுந்த கெப்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனமொன்று, பஸ் தரிப்பு நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து […]

ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை; கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (13) அன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், முதலாம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களை சேதப்படுத்தியவர் கைது

கடுவளை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் திங்கட்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக […]

விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, பிரதமர் ஹரணிக்கு எதிராக பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. 6ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஹரணிக்கு எதிராக விமல் வீரவன்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவால், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக (நேற்று திங்கட்கிழமை (12) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை (13) ) இரண்டு நாள் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. […]