முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
முச்சக்கரவண்டிகளைத் திருடி அவற்றின் இயந்திரங்கள் மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்ணங்களை மாற்றியும் மீண்டும் விற்பனை செய்து வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் நபரொருவர் தமது முச்சக்கரவண்டி திருடப்பட்டதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், நுகேகொடையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கைதானவர்கள் அங்குருவெல்ல மற்றும் குருவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்ட 11 முச்சக்கரவண்டிகள் […]
உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் […]
மீண்டும் வழமைக்குவந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் […]
மீண்டும் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

‘டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. குறித்த பரீட்சைகள் இன்று (12) முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன், 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் 32 பிரதேச மத்திய நிலையங்களும் இதற்காகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமை காரணமாகத் தேசிய […]
ஆங்கிலப் புத்தக சர்ச்சை: குற்றவாளி கண்டறியப்பட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை?

தரம் 6 ஆங்கில அச்சுப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தலத்தை உட்புகுத்திய நபர் யார் என்பதை இனம் கண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அப்படியாயின் குற்றப்புலனாய்வு பிரிவு அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை என கேட்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். சர்ச்சைக்குரிய ஆங்கில புத்தக தொகுப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், […]
தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசிய பேரவையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சரை சந்தித்த நிலையிலேயே முதலமைச்சரால் பிரதமருக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. முன்மொழியப்படும் மாற்றங்கள் இலங்கையில் மீண்டும் […]
பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்த தபால் துறை

இலங்கை தபால் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை கடந்து, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கை தபால் திணைக்களம் 13.1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இது திறைசேரி எதிர்பார்த்த இலக்கை விட அதிகமானது என தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அஞ்சல் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் 2025 இல் வழங்கப்பட்டுள்ளன. […]
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் […]