ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்?

ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனித உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களை […]

விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச பள்ளி கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளைத் தொடங்குவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத் திட்டமான ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்துக்கும் இடையே உள்ள கலாசார மற்றும் மொழிரீதியான உறவை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வாரணாசியில் (காசி) உள்ள அரசு ராணி கல்லூரியைச் சோ்ந்த மாணவி பாயல் படேல், மிகக் குறுகிய காலத்தில் […]

16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த சி-62 ராக்கெட் இன்று ஏவப்படுகின்றது!

பாதுகாப்பு, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-என் 1 உள்பட 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திங்கள்கிழமை (ஜன.12) ஏவப்பட உள்ளது. பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 10.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. […]

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் இன்று திங்கள்கிழமை (ஜன.12) காலை டெல்லி புறப்பட்டார். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் […]

விபத்தில் 8 வயது சிறுமி பலி!

குருநாகல் மாவட்டம், கல்கமுவை பகுதியில் தந்தையுடன் வீதியில் நடந்து சென்ற 8 வயது சிறுமி ஹயஸ் வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று(11) ஞாயிற்றுக்கிழமை மாலை குருநாகல் மாவட்டம், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமி தனது தந்தையுடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களின் பின்னால் அதிவேகமாக வந்த ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் […]

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த சந்திப்பு!

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை உரியவாறு கையாண்டு, இவ்வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன. மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது குறித்த […]

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய (11) மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் குறித்தப் போட்டியானது மழை காரணமாக 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் […]

நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் விபத்து

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி நேற்று (11) மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக மீனவர்களால் கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு!

கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் நேற்று (11) புறக்கணித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விசைப்படகுகள் ஊடாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு, கச்சத்தீவு திருவிழாவுக்கு மக்கள் அழைத்து செல்லப்படுவதால், நாட்டு படகு மீனவர்களுக்கு அதில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் வௌிநாடுகளில் வாழும் சுற்றுலாப் பயணிகளுக்கே அந்த திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் […]