வீதி விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் ரதாவடுன்ன பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கெப்ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 81 வயது முதியவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல , மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை பெப்ரவரி 13 ஆம் திகதி மீண்டும் விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட […]

இராணுவ மேஜர் என்று கூறி செல்வந்தர்களை மிரட்டி பணம்பறித்தவர் கைது

கொழும்பில் இராணுவ மேஜர் என்று கூறி செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கடத்துதல், மிரட்டுதல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் பேலியகொட குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பேலியகொட குற்றப்பிரிவு பணிப்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொலிஸாரை ஏமாற்ற மேஜராக செயல்பட்டு பல்வேறு குற்றங்களைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர் […]

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வாய்ப்பில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீரா பெரேரா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய வரலாறு தற்பொழுது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது […]

மையவாடி கடலரிப்பில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொட்டும் மழைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் இடைவிடாது 4 நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் கல் அணைகளை […]

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை!

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு […]

சர்வதேச காற்றாடி திருவிழா

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சா்வதேச காற்றாடி திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து தொடக்கிவைத்தனர். மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து பட்டம்விட்டு தொடக்கிவைத்தனர். இந்த விழாவில், 50 நாடுகளைச் சேர்ந்த 135 சர்வதேசப் பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன், இந்தியாவின் பல்வேறு […]

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி

வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக மாறி வருவது ஜெர்மனி. காரணம், இங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், அந்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்குகின்றன. ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்பை, வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக 534 பல்கலைக்காகங்கள் உள்ளன. இவை, இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை வழங்குகின்றன. ஜெர்மனியில் பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. இங்கு கல்லூரிகள் என்ற அமைப்புகள் இல்லை. இங்குள்ள […]

சமூக ஊடக தடை ; மெட்டாவின் அதிரடி நடவடிக்கை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருப்பதைத் தடை செய்யும் புதிய சட்டம் கடந்த டிசம்பரில் அமுலுக்கு வந்ததையடுத்து, அதன் முதல் நாட்களிலேயே மெட்டா நிறுவனம் சுமார் 5.5 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. அவுஸ்திரேலியா இந்த சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இன்ஸ்டாகிராம், முகநுல் உள்ளிட்ட உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருப்பதைத் தடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கவனித்து வரும் சமூக வலைத்தளங்களின் தடை , சிறுவர்கள் […]

வெனிசுவேலாவில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுவேலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுவேலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும். வெனிசுவேலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் […]