திருமலையில் வர்த்தக சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து”, உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி”, “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான […]

சுங்க திணைக்களத்திற்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்!

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய […]

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு போராட்டம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டில், துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி இன்று (12) கொழும்பு 07இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. “துணை மருத்துவப் பட்டத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கம்” என்ற தொனியில் ஒன்றிணைந்த மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் வரிசை அடிப்படையில் தங்களை உடனடியாக அரச சேவைக்கு உள்வாங்குவதற்கான முறையான நடைமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கறுப்பு […]

இந்தியாவின் சி-62 ரொக்கெட்டுக்கான விண்வெளி திட்டம் தோல்வி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி 62 ரொக்கெட் விண்ணில் ஏவ தயாரானது இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட்டாகும். இதற்கான 24 மணி […]

இலங்கை மக்கள் சார்பாக இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பு

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். குறித்த நிகழ்வானது தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கொவிட் பெருந் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டித்வா புயலின் போது இந்திய அரசு இலங்கைக்கு […]

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுங்கள் – எல்லே குணவங்ச தேரர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளதாவது, பிரதமரின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தன்னிச்சையான கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், நாடும், மக்களும், புத்த சாசனமும் கடுமையான அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பது உறுதியாகிறது. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் நேரடி […]

முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் அரசுச் கட்சி பங்கெடுக்கவில்லை – சிவஞானம் ஸ்ரீதரன்

ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும் இலங்கை தமிழ் அரசுச் கட்சி, பிரதமருக்கு எதிரான நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அண்மையில் […]

ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (12) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 09 மாவட்டங்களுக்கு: சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. 05 மாவட்டங்களுக்கு: மஞ்சள் எச்சரிக்கை (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை […]

ஈக்வடோரில் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட மனிதத் தலைகள்!

ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடோர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்ததுடன் கொடூரமான கொலைச் சம்பவங்களும் […]