ஒண்டாரியோவுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை

ஒண்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton), நயாகரா (Niagara) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த குளிர் காற்று வீச்சு (Cold Front) தெற்கு ஒன்டாரியோ பிராந்தியத்தைக் கடந்து செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஈரி ஏரி (Lake Erie) கரையோரப் பகுதிகளுக்கு ‘மஞ்சள் நிற’ (Yellow Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் […]
ஈரானுக்கு ஆதரவாக மொண்ட்ரியல் நகரில் பேரணி

ஈரானில் நிலவி வரும் மக்கள் எழுச்சி இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மொண்ட்ரியல் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்டப் பேரணி நடத்தினர். மொண்ட்ரியலின் அட்வாட்டர் (Atwater) மெட்ரோ நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, அமெரிக்க தூதரகம் நோக்கிச் சென்றது. ஈரானில் நிலவும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகவும், அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஈரான் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் இணையச் சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது. […]
நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்

ஒட்டாவா அருகே உள்ள கிராமப்புற மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (Emergency Departments) நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய ‘நடமாடும் மருத்துவச் சேவையகம்’ ஒன்று தனது சேவையைத் தொடங்கியுள்ளது. கெம்ப்ட்வில் மாவட்ட மருத்துவமனை (KDH) மற்றும் மேற்கு ஒட்டாவா ‘ஹார்ட் ஹப்’ (West Ottawa HART Hub) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன. போதைப்பொருள் பழக்கம் மற்றும் வீடற்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான சிறப்புச் சிகிச்சைகளை நேரடியாக வழங்குவதே […]
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவுபெற்றுள்ளது. இதற்கமைய, நாளை(13) காலை மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. சுமார் 7 மணி நேர விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அவர், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஒன்றரை மணிநேரம் தனியறையில் கையெழுத்திடுவதற்காக வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கையொப்பமிட்டு வெளியேறிய அவர், தான் தங்கியிருகும் ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சிபிஐ […]
தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் – ஐங்கரநேசன்

தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் […]
இலங்கை – சீன வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டித்வா புயலுக்கு பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதும், சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்து அறிவிப்பதும் இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் சீனா செல்லும் வழியில், சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் […]
முரசுமோட்டை விபத்தில் மேலும் இருவர் பலி

கிளிநொச்சி – ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மேலும் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட […]
வனவிலங்கு காரியாலயம் உடைப்பு: திருட்டுப் பொருட்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு, புனானை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில், சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2ஆம் திகதி, வாழைச்சேனை–கொழும்பு வீதியில் புனானையில் அமைந்துள்ள பூட்டியிருந்த வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று, அதற்கான மூன்று தோட்டாக்கள், துளையிடும் கருவி (ரில்லர்), […]
கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை; அரசாங்கம் அரசியலமைப்பை மீறுகின்றது!

அரசாங்கம் தனது தோல்விகளுக்கான பழியை அரச அதிகாரிகள் மீது சுமத்தும் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது. அமைச்சர்கள் தமது பொறுப்புகளில் இருந்து நழுவிச் செல்வதால், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்கப் பயப்படுகின்றனர் என பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கடுகம்பொல தொகுதி அமைப்பாளர் பேராசிரியர் சரித ஹேரத், திங்கட்கிழமை (12) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், […]
பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி; முரசுமோட்டையில் சம்பவம்

விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், […]