தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை – எதிர்க்கட்சித் தலைவர்

“நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பாரிய பொதுக் கூட்டம் நேற்று (10) களுத்துறை, மத்துகம நகரில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் […]

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருவதால் இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. அத்தோடு, மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான் பாய்கின்றது. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றதால் அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வட்டுவாகல் பாலம் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதனால் பாலத்தினூடாக பயணம் செய்பவர்கள் சற்று அவதானத்துடன் பயணம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டுள்ள வவுனியா- பேராறு வான் கதவுகள்!

வவுனியா- பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 3 வான்கதவுகளில் ஒரு வான் கதவு 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் […]

சாவகச்சேரியில் இருவர் கைது!

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிஸார் விரைந்தனர். இதன்போது இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார் இருவரை கைது செய்தனர். கைதானவர்களையும், சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று(10.01.2026) […]

வட்டுவாகல் பாலம் ஊடான வீதிப் போக்குவரத்து…

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி போக்குவரத்து வழமை போன்று சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. தற்போது நாடெங்கிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் நேற்றையதினம்(9.1.2026) தொடக்கம் தொடர்ச்சியான முறையில் மழை பெய்து வருகின்றது. இதனால் குளம், கடலின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியான மழை கிடைப்பதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் வழமையை விட சற்று உயர்வடைந்துள்ளது. எனினும் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து வழமை போன்று இடம்பெற்று […]

டுபாயில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கொண்ட ரஞ்சி’ என்று அழைக்கப்படும் ரஞ்சித் குமார இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் மேற்படி சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் மனைவியும் பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரே இந்தக் ‘கொண்ட ரஞ்சி’ என்ற ரஞ்சித் குமார […]

பெற்றோருக்குச் சுமையையும் பிள்ளைகளுக்குத் துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

பெற்றோருக்குச் சுமையையும் பிள்ளைகளுக்குத் துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப் போவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொய்ப் பிரசாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி […]

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கியதில் 16 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தங்கள் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். அருகில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை மீட்கச் சென்றபோதே, அச்சிறுவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவின் […]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று(10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யாழில் கடுகதி ரயில் மோதி இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் – அரியாலை, 13ஆம் கட்டைப் பகுதியில் இன்றையதினம் ரயில் விபத்தொன்று சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடந்த காலங்களிலும் பல உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்கு […]