‘பராசக்தி’ குறித்து கெனிஷா

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தினை ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் ரவி மோகன் ரோல் குறித்து பேசியுள்ளார். பராசக்தி கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் ரவி மோகன் . சார்மிங்கான கதாநாயகனாக கலக்கி வந்த இவர், ‘பராசக்தி’ படத்தின் வாயிலாக முதன்முறையாக வில்லன் அவதாரம் […]

பெரிய நடிகர்களின் படங்கள் பிப்ரவரியில்…

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக தெரிகின்றது. அதைப்போல அடுத்த மாதம் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படங்கள் என்னென்ன ? என்பதனை பார்க்கலாம் முக்கிய அம்சங்கள்: ஜனநாயகன் முதல் கருப்பு வரை பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் ஆகிய படங்கள் தான் வெளியாக இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீசாகமுடியாமல் போனது. […]

பொங்கலுக்கு கார்த்தியின் வா வாத்தியார்

கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரு வெற்றிப்படங்களை கொடுத்த நலன் குமாரசாமி தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இரு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கின்றது. ஆனால் ஒரு சில நிதி நெருக்கடி காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் கூட இப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என தாயரிப்பாளர் […]

விஜய் படமும் அஜித் படமும் ஒரே மாதிரியா?

ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கும் அஜித்தின் இந்த படத்திற்கும் மாபெரும் ஒற்றுமை இருப்பதாக ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர் முக்கிய அம்சங்கள்: ஜனநாயகன் – வலிமை ஒற்றுமைகள் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இந்நேரம் திரைகளில் கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய படமாக இருந்திருக்கும். ஆனால் சென்சாரில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாமல் போய்விட்டது. இது விஜய் ரசிகர்களுக்கும் ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்து […]

பராசக்தி இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த நகர்வு

சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ யார் ? என்பது குறித்து தற்போது பார்க்கலாம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தை இயக்கியவர் தான் சுதா கொங்கரா. இப்படம் மூலம் சுதா கொங்கரா மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். என்னதான் பராசக்தி திரைப்படம் நேற்று தான் வெளியாகியிருந்தாலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் […]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ.. சுகுமாரி ‘

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான திருவீர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஓ.. சுகுமாரி’ எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திர தோற்றப் பார்வையை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ.. சுகுமாரி’ எனும் திரைப்படத்திற்கு சி ஹெச் குஷேந்தர் ஒளிப்பதிவு செய்ய பரத் மஞ்சு ராஜு இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியிலான கதையாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் […]

2025 ஆம் ஆண்டு; 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரசபையின் அதிகாரிகள் 1,20,000 க்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக மின்னணு, டிஜிட்டல் […]

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை சீரமைக்க உத்தரவு!

‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார வேலிகள் சேதமடைந்ததுடன், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல வனஜீவராசிகள் வலயத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கு முழுமையான மற்றும் பகுதி சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொலன்னறுவை மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதுகாப்பு மின்சார வேலிகள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மின்சார வேலி […]

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள்

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் […]

தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி தொடருந்து சேவை(09.01.2026) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு போக்குவரத்து அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளின் பெயரில் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது நேற்று நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பில் இருந்து மீண்டும் இன்று (11) நண்பகல் கொழும்புக்கான கடுகதி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கிழக்கு […]