வைரஸ் நோய்கள் இலங்கையில் தீவிரமாகப் பரவுகின்றன…

இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் இன்ப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் நோய்களின் பரவலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் கே.வி.சி. ஜனக குறிப்பிட்டுள்ளார். இதே நேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தொற்று நோய் நிபுணர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார். ஆண்டின் கடந்த 09 நாட்களில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2170 ஆகும். 41 […]
ஏறாவூரில் சோதனை நடவடிக்கை

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி தனியார் காணி ஒன்றில் ஆயுதங்களை தேடி, நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நேற்று சனிக்கிழமை (10) பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த நிலையில் எந்த பொருட்களையும் மீட்கப்படவில்லை என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைவிடப்பட்டுள்ள தனியார் காணியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை தோண்டி சோதனை செய்வதற்காக ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியை […]
பிரதமருக்கு எதிரான அவதூறு; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும், பிரதமர் என்கின்ற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கின்ற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது […]
விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். “கிரீன் ரோடு” வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொண்டு வந்த பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36,45,000 ரூபாய் மதிப்புள்ள 20,700 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் ஈரான் தூதரகத்தின் மீது ஏறிய போராட்டக்காரர்கள்

ஈரானில் நிலவும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போது போராட்டக்காரர் ஒருவர் தூதரகத்தின் மேல் தளத்தில் ஏறி ஈரான் தேசியக் கொடியைக் கிழித்தெறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு முன்பாக சனிக்கிழமை திரண்ட போராட்டக்காரர்கள், ஈரான் அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். இதன்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவசரப்பிரிவு ஊழியர் மீது தாக்குதல் […]
ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் […]
2025; மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை யாருக்கும் மாற்ற முடியாது!

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு […]
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி குழு இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதி குழு இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனை அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது. சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் […]
கனடாவில் விசா இல்லாத ஊழியர்களை துன்புறுத்திய 3 உணவக உரிமையாளர்களுக்கு சிறை

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்திய மூன்று உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கல்கரியில் உள்ள மெரினா தோசை மற்றும் தந்தூரி கிரில் ஆகியவற்றின் உரிமையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கமைய உணவக உரிமையாளர்களான மணிகண்டன் காசிநாதன், சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோருக்கு தலா 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களால் மோசடி செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கும் 44,000 டொலர் அளவிலான பணத்தை செலுத்த வேண்டும் […]
விஜய் சேதுபதி வெளியிட்ட வடிவுக்கரசி நடிக்கும் ‘ க்ரானி’

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகையான வடிவுக்கரசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ க்ரானி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜயா குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ க்ரானி’ எனும் திரைப்படத்தில் வடிவுக்கரசி, சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. […]