முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று வற்றாப்பளை வீதிகள் சீரின்மை

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (11) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ள வெளி 01ஆம் […]
மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள போதிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள போதிலும், மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் மாத முதல் வாரத்திலும் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகள் இன்னும் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பருவமழையுடன் கூடிய சிறிய அளவிலான மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். […]
30,322 நபர்கள் சோதனை; 500-க்கும் மேற்பட்ட குடிபோதைச் சாரதிகள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (10) நாடு முழுவதும் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. ஒரு ஏக்கர் விதை நெல் செய்கைக்காக 13,600 ரூபா காப்புறுதிப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், பயிர்ச் சேதம் ஏற்படும் போது ஒரு ஏக்கருக்கு 1,80,000 ரூபா நஷ்டஈட்டுத் தொகையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியும். வெள்ளம், வறட்சி, கட்டுப்பாடற்ற […]
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை;’சுப்பர் முஸ்லிம்’ அமைப்பின் தலைவர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பின் தலைவர் கலாநிதி கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் எனது பெயர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, ஒரு சுருக்கமான மற்றும் பொறுப்பான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன். நான் எந்தவித வன்முறை, தீவிரவாத அல்லது […]
இருபதுக்கு 20; களமிறங்கும் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தொடரை சமப்படுத்துவதற்காக இலங்கை அணி இன்றைய தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் அதேவேளை தொடரை வெற்றிக் கொள்ளும் முனைப்புடன் விளையாடவுள்ளது. தொடரில் பாகிஸ்தான் அணி 1 க்கு […]
24 மணிநேரத்திற்கான வானிலை
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]
தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 119 எண் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு செல்லும் போது சந்தேக நபரான தேரர் தனியாகவே 04 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்த முறையான வேலைத்திட்டம்

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: “சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் […]
‘ஜனநாயகன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட இநதிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கடந்த 9ஆம் திகதி வெளியாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இப்படத்தின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், என்னால் எல்லாவற்றையும் பகிர முடியவில்லை. கடந்த டிசெம்பர் 18ஆம் திகதி ‘ஜனநாயகன்’ தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. […]