மன்னாரில் இளம் பெண்ணை காணவில்லை

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா என்ற 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான இந்தப் பெண்ணை, அவரது கணவர் நேற்றைய தினம்(10.01.2026) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பற்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சைக்காக அவரை வைத்தியசாலையில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் […]

கண்டி-ராகல சாலையில் பாலம் திறப்பு

100 அடி பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் (டாக்டர்) பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் (டாக்டர்) மதுர செனவிரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ராகல சாலையில் உள்ள B-492 நெடுஞ்சாலையில் […]

ரோஹினிக்கு புதிய பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமகி வனிதா பலவேகயவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் உரிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் இணைந்துகொண்டார்.

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திங்கட்கிழமை (12) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் செவ்வாய்க்கிழமை காலை சாப்பாட்டுடன் சந்திப்பை நடத்துவார். போர்ட் சிட்டி உள்ளிட்ட இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும். சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நாட்டிற்கு வருகை தருவதை ஊக்குவிப்பதற்கும், கொழும்புக்கு கூடுதல் விமானங்களை எளிதாக்குவதற்கும் இலங்கைத் தரப்பு சீனாவின் உதவியை நாடும். இந்திய வெளியுறவு […]

மண்சரிவுகளில் புதையுண்ட லயன் குடியிருப்பாளர்களும் மலையகத் தியாகிகளே – திலகர்

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார். மலையகத் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வுகள் நுவரெலியா நகர மத்தியில் அமைந்த மலையத் தியாகிகள் நினைவு தூபி முன்றலில் மலையகத் தியாகிகள் தினமான ஜனவரி 10 ஆம் திகதி காலை நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் […]

தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி யாழ் விஜயம்!

  தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் […]

தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரை பெரும் பாதிப்பு

பருத்தித்துறை – மூர்க்கம் கடற்கரை காலநிலை சீரின்மை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை – தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அனைத்தும் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண் அரிப்பு ஏற்படும் பட்சத்தில் கடல் நீர் ஊர்மனைக்குள் உட்புகும் பேராபத்து உள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் அயலில் உள்ள ஒரு கிராமமே பெரிதும் […]

மின்சார சபை ஊழியர்கள் நால்வர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சியில் மின்சார சபையில் பணிபுரியும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையின் இன்றையதினம்(11.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் குற்றத்திற்காக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார சபைக்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்கள் மேலதிக […]

வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு

‘தித்வா’ (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹோ ரயில் நிலையத்தில் இன்றையதினம் காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடியதுடன், விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை […]