கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து கோரிக்கை

திருகோணமலை வீரநகர் கரையோர பகுதியில் அதிக காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி தாழ் இறங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி கரையோர கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கரையோரப் பகுதியில் ஏற்கனவே நான்கு வீடுகள் கடல் சீற்றம் காரணமாக தாழ் இறங்கி சேதமாக்கப்பட்ட நிலையில் ஒரு பகுதிக்கு மாத்திரம் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் இடும் நடவடிக்கை இடம் பெறுகிறது ஆனால் குறித்த கரையோரமானது 500 மீற்றருக்கும் […]
கைதிகளை விடுவிக்கும் வெனிசுலா

மனித உரிமைகள் குழுக்களால் அரசியல் கைதிகளாகக் கருதப்படும் கைதிகளை விடுவிக்க வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அதிகாரிகள் நல்லெண்ண நடவடிக்கையாக விபரித்துள்ளனர். இதன்படி, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட அதன் ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் ரோசியோ சான் மிகுவல் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலின் பின்னர் வெனிசுலாவின் ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை […]
முன்னாள் அமைச்சர் – அவரின் மகன்கள் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கம் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை, எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (09) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்தபோது சதோச லொறியை தவறாக பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கானது, […]
சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல்; கைதிகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் கைது!

பூஸா சிறைச்சாலையில் டிசம்பர் 7 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் இரண்டு கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் ரத்கம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உடந்தையாக […]
EPF மற்றும் ETFக்கு பதிலாக ஓய்வூதியம்? – அரசு விளக்கம்

ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி பொதுமக்களுடையது. அவர்கள் ஓய்வு பெற்ற […]
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டம்

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று முன்தினம் (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள […]
குடிவரவு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி; அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்பின் புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு குடிவரவு அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மினியாபோலிஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள பழமையான புலம்பெயர் சந்தைகளுக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மிகத் தீவிரமான […]
சமநிலையில் நாப்போலி – வெரோனா போட்டி

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற ஹெலாஸ் வெரோனாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி சமப்படுத்தியிருந்தது. நாப்போலி சார்பாக ஸ்கொட் மக்டொமினி, ஜியோவனி டி லொரென்ஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெரோனா சார்பாக மார்டின் பிறெஸே, கிஃப்ட் ஓர்பன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இந்நிலையில் தமது மைதானத்தில் வியாழக்கிழமை (08) பியொரென்டினாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ […]
இலங்கையுடன் இணைந்த ரத்தோர்

இலங்கையணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக ஆலோசனை அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் தயார்படுத்தலை பிரதான நோக்காகக் கொண்டே ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (08) தெரிவித்துள்ளது. இலங்கைக் குழாமுடன் ஜனவரி 18ஆம் திகதி ரத்தோர் இணையவுள்ளதுடன், மார்ச் 10ஆம் திகதி வரையில் அணியுடன் இருக்கவுள்ளார்.
சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் பலி – சந்தேகநபர் தடுப்பு காவலில்

சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குறித்த பிரதான சந்தேகநபர், கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நேற்று (08) மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபானத்தை அருந்திய 06 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 08 […]