நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு வௌியாகாது!

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த உத்தரவில், “ஜனநாயகன் திரைப்பட […]

கேகாலை விபத்தில் இருவர் பலி: 6 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (9) மாலை இரண்டு பேருந்துகளும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லயிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மொலகொட பல்பத்த பகுதியில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கவிருந்தபோது, ​​பூண்டுலோயா டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, தனியார் பேருந்துடன் மோதி, முன்னோக்கிச் சென்று வயலில் […]

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல்; விவாதத்திற்கு வருமாறு சவால்

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால் விடுத்துள்ளார். இந்த நிலக்கரி டெண்டர் கொடுக்கல் வாங்கல் முற்றிலும் ஊழல் நிறைந்தது என்பதை தாம் நிரூபிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து விவாதிக்க வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியின் முதல் வாரத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் […]

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி அபாயமில்லை

சிவனொளிபாத மலை – ஹட்டன் வீதியில் மண்சரிவுக்குள்ளான மகாகிரிதம்ப பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர், சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மகாகிரிதம்ப பகுதியில் மண்சரிவு அபாயம் நீங்கியுள்ளதாகவும், யாத்ரீகர்கள் பாதுகாப்பாக அந்தப் வீதியை பயன்படுத்திசிவனொளிபாத மலை தரிசனத்திற்குச் செல்ல முடியும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், சிவனொளிபாத மலையின் பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய தொரப்பனே சுமனஜோதி தேரரிடம் நேரில் அறிவித்துள்ளனர். டித்வா புயல் காரணமாக […]

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் கொள்ளை

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான […]

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்கிறது!

மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமையத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தாழ்வு […]

நிலச்சரிவுகள் குறித்து ஆராய விசேட குழு

அம்புலுவாவ சுற்றுச்சூழல் மண்டலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் குறித்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் நிபுணர் குழுவை நியமிக்க ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள் குறித்து அறிக்கை அளித்து வரும் ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன உட்பட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழு அண்மையில் சுற்றுச்சூழல் அமைச்சரைச் சந்தித்து இந்த நிலைமை குறித்து விவாவித்துள்ளது. இந்த கூட்டத்தின் போது, “உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலத்திற்குள் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை […]

வாபஸ் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்

லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில், 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2019 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஆணைக்குழு மொத்தமாக 102 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவற்றை மீளாய்வு செய்த பின்னர் 65 வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி சிறீதரனுக்கு பணிப்பு

அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் (07.01.2026) திகதியிட்டு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. சிறீதரனின் கிளிநொச்சி, வட்டக் கட்சி முகவரிக்கு இது தொடர்பான கடிதத்தைப் பதிவுத்தபாலில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ளார். அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை […]

சிறைக் கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக கைதியை ஊசியால் குத்திய தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறை கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (07.01.2026) இரவு குறித்த கைதியை சோதனை செய்த மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன்போது, 128 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய […]