பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியவருக்கு நிபந்தனையுடன் பிணை

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹணவை புத்தளம் நீதிவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது. புத்தளம் பதில் நீதிவான் தயானி சந்தியா ரத்நாயக்க சந்தேகநபரான விமல் ரோஹணவுக்கு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதி அளித்தார். புத்தளம் பிரதேச சபையின் மங்களஎளிய வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் […]

தோல்வியடைந்த வரவு – செலவு திட்டத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானம்

கொழும்பு மாநகரசபையின் தோல்வியடைந்த அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை மீண்டும் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடியே இந்த தீர்மானத்தை மேற்கொள்ளனர். இதுதொடர்பில் மாநகரசபையின் கூட்டு எதிர்க்கட்சிகளின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவிக்கையில், காெழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற வாக்கெடுப்பில் 57 க்கு […]

பாடசாலை கட்டடம் திடீரென இடிந்தது

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து, திருகோணமலை – மூதூர் மத்திய கல்லூரியின் பிரதான வகுப்பறை கட்டடம் ஒன்று நேற்று முன்தினம் (25.12.2025) திடீரென இடிந்து விழுந்துள்ளது. குறித்த விபத்து பாடசாலை விடுமுறை தினத்தில் நேர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த தினங்களுக்கு முன்னர், டித்வா புயலால் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மூதூர் பகுதியில் பாதிப்புகளை […]

ஜீமெயில் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தாங்கள் பயன்படுத்தி வரும் Gmail மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற விரும்பினாலும், இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்த பயனர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்க, கூகுள் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்ததும், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், அதில் தேவையான பெயரை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், புதிய கணக்கொன்றை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள கணக்கின் தகவல்களை மாற்றாமல், […]

பிரதான தொடருந்து சேவைகள் பாதிப்பு

பிரதான தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. மீரிகம மற்றும் பல்லேவெல இடையே தொடருந்து தடம் புரண்டமை காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மீரிகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மீரிகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் சிறிய தொடருந்து தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று தொடருந்து கட்டுப்பாட்டு அறை மேலும் கூறியுள்ளது.

அர்ச்சுனா பொலிஸில் முறைப்பாடு

தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வலிகாமம் பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் உட்பட பலர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக அர்ச்சுனா குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். மல்லாகம், காங்கேசன்ராய வீதி, 80/14 என்ற முகவரியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கட்சி அலுவலகம் ஒன்றைப் பராமரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சுனாவோ அல்லது உறவினர்களோ அல்லது வெளியாட்களோ அந்தப் […]

கல்வித் திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சிறந்த கல்வித் திட்டம் ஒன்று அவசியம் என்று கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படுவது மட்டும் போதாது. இது போன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. புதிய கல்வி திட்டம் ஐந்து முக்கிய தூண்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. விடயதான தரப்பு, மனிதவள அபிவிருத்தி, மதிப்பீட்டு அணுகுமுறை, நிர்வாக மாற்றம், ஊடகம் மற்றும் […]