எலிக் காய்ச்சலால் துன்னாலையில் ஒருவர் உயிரிழப்பு
எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது 66) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். மூன்று நாட்கள் காய்ச்சல் காரணமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
29 ம் திகதி முதல் மழையுடனான வானிலை
நாளை மறுதினம் அதாவது 29 ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அச்சமடைய தேவை இல்லை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா […]
கம்பஹா நீதிவான் முன்னிலையில் டக்ளஸ்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட துப்பாக்கி திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி இருந்து மீட்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, […]
ஒற்றையாட்சி முறைமையைத் திணிக்க இலங்கை அரசு முயன்றால் தமிழீழ விடுதலைப் போராட்டம் புதுப்பிக்கப்படும்
ஒற்றையாட்சி முறைமையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழகக் கட்சி ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, -ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறைமையை வலுப்படுத்தும் நோக்கில் அரசமைப்புத் திருத்தங்களைத் […]
16 ஆண்டுகளுக்குப் பின் கிளிநொச்சியில் விடுவிக்கப்பட்ட காணிகள்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலம் விடுக்கப்பட்டுள்ளன. சுமாராக 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை மற்றும் மேட்டுநிலக் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக, இன்று(26.12.2025) நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள 25 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை உரிய மக்களிடம் விரைவாக கையளிப்பது தொடர்பாக […]
தையிட்டியில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டமைக்கு கடும் கண்டனம்
தையிட்டி போராட்டத்தில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுவதையும், தமிழர் தாயக பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தமயமாக்கப்படுதலையும் இந்நாட்டு பிரஜைகளுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்கும். நமது எதிர்ப்பை காட்டுவதற்கும் தமிழர்கள் சாத்வீக வழியில் போராட்டங்களை நடத்துகின்றனர். இப் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக அடக்குமுறைகளையும் பொலிஸ் அராஜகத்தையும் அரசுகள் பாவித்து வந்தன. ஆனால், புதிய அரசு அதைவிட […]
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் (வயது 80), லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவராவார். 1970-களில் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டர் பகுதிக்கு வந்த மஞ்சுளா, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனது கணவர் போலின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். 1996 ஆம் ஆண்டில் நகரின் முதல் இந்துப் […]
இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி
இந்தியாவுக்கு எதிராக திருவனந்தபுரம், கிறீன்ஃபீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் மேலும் 2 போட்டிகள் மீதமிருக்க 0 – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரையும் இலங்கை பறிகொடுத்தது. ரேனுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், ஷபாலி வர்மாவின் […]
மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை
நடுத்தர மக்கள் கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது. வாகன இறக்குமதிக்காக […]
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார்
அரசியலமைப்பின் சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைந்ததன் பின்னர் கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் வழங்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு […]