இலத்திரனியல் உபகரணங்களைப் பாராளுமன்றுக்குள் கொண்டு வர எம்.பி.க்களுக்குத் தடை?

‘ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா’க்கள் மற்றும் அதிநவீன, ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்., – எம்.பி., சவுகதா ராய், லோக்சபாவுக்குள், ‘இ – சிகரெட்’ எனப்படும் மின்னணு சிகரெட் பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல பல்வேறு காலகட்டங்களில் எம்.பி.,க்கள் பார்லி., நடவடிக்கைகளை படம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், லோக்சபா […]

இங்கிலாந்தில் கிரெட்டா தன்பெர்க்கை கைது செய்தது தவறு – சர்வதேச மன்னிப்புச் சபை ஆதங்கம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாதை வைத்திருந்ததற்காக லண்டனில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (Greta thunberg) பின்னர், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்தமை “தவறானது” என்றும் “தொல்லை தரக்கூடிய செயல்” என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதோடு, அவர் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உலகம் முழுவதும் அறியப்பட்ட 22 வயதுப் பெண் ஆவார். […]

‘டெவின்’ குளிர்கால புயல் ; ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ‘டெவின்’ (Devin) குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (26) அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்கா வழியாக இயக்கப்பட வேண்டிய 1,581 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,883 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனிடையே, அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் காரணமாக “ பயண நிலைமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான […]

ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக […]

ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

போதைப்பொருளை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மீதே தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதால், அந்த செய்தியை ஒளிபரப்பிய ஊடக நிறுவனத்தை அடக்குவதற்கு பொலிஸார் செயற்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் பொலிலாரின் நடவடிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பொதுஜன பெரமுன் கட்சி காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் […]

கடல் அலையில் சிக்கிய வெளிநாட்டவர்கள் மீட்பு!

ஹிக்கடுவ – பன்னங்கொட கடலில் நீராடச்சென்று, கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரும் சிறுவன் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (26) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடற்கரையில் பணியில் இருந்த, ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பிரதி ஆய்வாளர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க மற்றும் துமிந்த ஆகியோர் அவர்களை மீட்டு அடிப்படை முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் […]

வாகன விபத்துக்களில்: ஐவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்றையதினம் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கடுவளை, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 14 […]

மண்சரிவு அபாயமுள்ளவையாக 1,200க்கும் மேற்பட்ட இடங்கள் பதிவு!

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார். மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க, பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

சீதுவை களியாட்ட விடுதி மீது குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் கைது!

கம்பஹா – சீதுவை பகுதியில் களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த 6 பேர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், குறித்த விடுதியின் முகாமையாளர், தொழிலதிபர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் அடங்குவதாக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது நடவடிக்கையின் போது ஆறு பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு […]

சிரிய பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர். ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த பள்ளிவாசல், சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில், அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. […]