சாட்டி இந்து மயானத்தில் நவீன எரிவாயு தகனசாலை!

மின்சாரம் அல்லது எரிவாயு தகன மேடை ஒன்றை வேலணை சாட்டி இந்து மயானத்தில் அமைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு நேற்று (26) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எமது மக்களின் இறுதி பயணத்தின் இறுதி இடமாக இருபது மயானங்கள் தான். அதனால் மயானங்களின் மேம்பாடும் […]

மருதங்கேணி வைத்தியசாலையின் குறைகளை பார்வையிட்ட ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர்!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை பார்வையிட்ட போது, வைத்தியசாலை வளாகம் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, உடனடியாக அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் பரப்புவதற்காக […]

வீடொன்றின் பின்னால் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கண்டி – மஹையாவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 50 வயதுடையவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். சடலம் கண்டி வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக […]

வாகன விற்பனையில் திடீர் மாற்றம்

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மூன்று மாதங்களுக்குள் சுங்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளாவிடின் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை தளர்த்துமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய மோசமான வானிலை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக வாகன விற்பனை மந்தகதியில் உள்ளதால், இந்த அபராதச் சுமை இறக்குமதியாளர்களைப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை!

வவுனியா, சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு, அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது. மேலும், அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் […]

“ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழா ஆரம்பம்

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள குதிந்த ரசிகர்களால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் இன்று மலேசியாவின் புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் […]

இருபதுக்கு 20; இலங்கை முன்னாள் வீரருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்புக்கு மேலதிகமாக, அவருக்கு அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 2026 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்க கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. அவர்கள் தமது உலகக் கிண்ணப் பயிற்சிகளை இலங்கையிலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். உலகக் கிண்ணத் […]

தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலையம்

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்தல விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கான விருப்பம் கோரல்கள் (Expressions of Interest) அழைக்கப்படும் என்றும் […]

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் ; உலக பொருளாதார நிபுணர்களின் கருத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும்

உலக பொருளாதார நிபுணர்களின் கருத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும் ‘டித்வா’ புயலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் நேரடியான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. புயல் அனர்த்தத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘டித்வா’ புயலின் அழிவுகளைக் […]

டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல்

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது […]