ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரணிக்க – உக்ரேனிய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மரணத்தை விரும்புவதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக தனது கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 3 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்நிலையில் தனது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட உரையில் புடினின் மரணத்தை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் இல்லாது போக வேண்டும், […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சரியாக நடைபெறவில்லை

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை 100 வீதம் சரியாக நடைபெறவில்லை என விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்கும் சில விடயங்களில், 100 சதவீதம் முழுமையாகவே வேலை நடைபெறுகிறது என தம்மால் கூற முடியாது என தெரிவித்துள்ளார். எனினும், இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அளவிற்கு எந்தவொரு கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

பொலிஸ் அதிகாரி கைது; இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜா-எல, தண்டுகம பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்க நகைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கும், முறைப்பாட்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படால் இருப்பதற்குமாக 300,000 ரூபாய் மற்றும் முக்கால்வாசி தங்கத்தை இலஞ்சமாக கேட்டதாக சந்தேக நபர் […]

பண்டைய தமிழ் புத்த மரபின் மீதமுள்ள சாட்சிகளே தாயகத்திலுள்ள புத்தச் சின்னங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

தமிழ் தாயகத்தில் காணப்படும் எந்த புத்தச் சின்னங்களும் சிங்கள புத்த மதத்திலிருந்து தோன்றியவை அல்ல. அவை அனைத்தும் பண்டைய தமிழ் புத்த மரபின் மீதமுள்ள சாட்சிகள் என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று (25.12.2025) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை கூறுவதாக தெரிவித்து அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் […]

கடற்கரையில் சட்டவிரோத கட்டிடங்கள்; அனுமதிக்கும் புதிய சட்டம்

கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு மில்லியன் கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படவுள்ளது. இந்தப் புதிய சட்டம் ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. சட்டமா அதிபரினால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, சுனாமி பேரழிவிற்குப் பின்னர் கட்டுமானம் தொடர்பாக நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றமில்லை. முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தத்தில் வருடாந்த அனுமதி வழங்கும் திட்டம் […]

இளைஞன் இரவு உணவு உண்டபின் திடீர் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இதன்போது தனது சகோதருடன் இணைந்து கொத்து ரொட்டி […]

இளைஞனை தெருவில் இழுத்து வீசிய ஆசிரியர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஷெஹான் விதானபதிரண என்ற இயற்பியல் ஆசிரியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இளைஞனின் கடைக்கு முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞனின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் […]

இன்று சுனாமி பேரழிவின் 21 ஆவது ஆண்டு நிறைவு

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் எமது நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன. அதற்கமைய, சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 […]

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கொலை: சந்தேகநபர் கைது

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 2022.08.02 அன்று முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லேரியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த குற்றத்தைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த சந்தேகநபர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். மாலம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]