‘ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியுள்ளீர்களே, அவர் மாடுபிடி வீரரா?’
‘ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியுள்ளீர்களே, அவர் மாடுபிடி வீரரா?’ என, தி.மு.க., அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வேலு நாச்சியார் நினைவு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: வேலு நாச்சியார் வழியில் வந்த நம் தமிழ் பெண்கள், 1,000 ரூபாய்க்கு அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஈ.வெ.ராமசாமி வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? நம் தமிழ் பேரரசி வேலு நாச்சியார், […]
கிறிஸ்துமஸ் புயல் கலிபோர்னியாவில்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று டிசம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் கனமழையும், மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தெற்கு […]
த.வெ.க.,வுக்கு கட்டமைப்பு உள்ளதா?
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று அளித்த பேட்டி: பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் இணைவரா என கேட்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள் எதுவும் நடக்கலாம்; 24 மணி நேரத்தில் கூட, கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. த.வெ.க.,வுக்கு கட்டமைப்பு உள்ளதா? பூத் கமிட்டி முழுமையாக உள்ளதா? அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என அவர்களால் இப்போது சொல்ல முடியுமா? இவ்வாறு கூறினார்.
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர், நேற்று சந்தித்து பேசினர். தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம், வரும் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை கோயம்பேடில் உள்ள, அவரது நினைவிடத்தில், தே.மு.தி.க., சார்பில், குரு பூஜை நிகழ்வுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, அவர்களின் இல்லத்தில், நேற்று தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி ஆகியோர் […]
ஏற்காடு மலைப்பாதை வளைவுக்கு வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா?
ஏற்காடு செல்லும் மலைப்பாதை வளைவுக்கு ஈ.வெ.ரா., பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இடத்தில் தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டினர். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் […]
ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியாவில் தாக்குதல்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. அவர்கள் பல ஆண்டுகளாக, அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தாவிட்டால், நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நான் முன்பு இந்த பயங்கரவாதிகளை எச்சரித்தேன், இன்றிரவு, அது […]
காசாவில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு
காசாவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் இஸ்ரேல் அதனை தொடர்ந்து மீறி வருவதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீன அரசியல் கைதிகள் தொடர்பாக கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பான அடாமீர் (Addameer) அமைப்பின் பணிப்பாளர் அலா ஸ்காஃபி இதனைத் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் நுழையும் சரக்கு வாகனங்களில் சுமார் 80 சதவீதம் வணிகத் துறைக்கு திருப்பப்படுவதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அந்த வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள் […]
முல்லைத்தீவில் காணியற்றோருக்கு விரைவில் காணிகள் வழங்கப்பட வேண்டும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரிகளை நடாத்தி காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (24.11.2025) இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் […]
உயரமான மலையாகக் கருதப்படும் கிளிமஞ்சாரோவில் ஹெலிகொப்டர் விபத்து:5 பேர் பலி
ஆபிரிக்காவின் உயரமான மலையாகக் கருதப்படும் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தான்சானியா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கிளிமஞ்சாரோ மலையில் உள்ள பராஃபு முகாம் (Barafu Camp) அருகே இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர், மருத்துவ மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக […]
வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா ?
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா என்று பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பி உள்ளார். அதிகளவான இடங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற போதிலும் நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் மட்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவில்லை வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் எம்பி தன்னுடைய முகநூலில் கடந்த 23ஆம் திகதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெறுவதாக தெரிவித்திருந்தார். […]