4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிராக மெல்பேணில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்டில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா களமிறங்கவுள்ளது. உஸ்மான் கவாஜா தனதிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், ஜொஷ் இங்லிஸின் இடத்தில் அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் திரும்பியுள்ளார். பற் கமின்ஸ், நேதன் லையனை மைக்கல் நேஸர், ஜஹை றிச்சர்ட்சன், பிரெண்டன் டொக்கெட் ஆகிய மூவரில் இருவர் பிரதியிடவுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் டொட் மேர்பி 12 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுத்தல்

அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல் வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதனை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெல்லிப்பழை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் 80/14, காங்கசந்தராயா சாலை, மல்லாகம் என்ற முகவரியில் ஒரு கட்சி அலுவலகத்தை நடத்தி வருகிறார். மேலும், பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது உறவினர்களோ அல்லது வெளியாட்களோ அந்த இடத்தில் வசிக்கவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் மீசலே […]

கிழக்கில் 33,640 விவசாயிகள் பாதிப்பு!

டித்வா புயல் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ் அவர்கள் பாதிப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவை […]

தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணி – அமைச்சர் சந்திரசேகரன்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் […]

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கிறது – சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிப்பதாகவும், நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். சுயாதீன ஊடகங்கள் மீது அரசாங்கத்தின் அழுத்தம் தொடர்பாக, பிரேமதாச வியாழக்கிழமை (25) ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். அவர் குறிப்பிட்டதாவது, ஜனநாயக நாட்டில் நான்கு முக்கிய தூண்கள் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகங்கள் ஆகும். ஆனால் தற்போது அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் காவல்துறை அதிகாரிகளின் […]

துன்னாலை மக்களுக்கு றஜீவன் எம் பி உதவி

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட துன்னாலை ஆட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன். தனது தனிப்பட்ட நிதியிலிருந்து முப்பது குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவ பொருட்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான அஜந்தன், நிதர்சன், மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், பயனாளிகள், மற்றும் தேசிய மக்கள் […]

வானதி அயந்தன்

யாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வானதி அயந்தன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார். அன்னார், நடராசா(பொலிசர்) மீனாட்சிப்பிள்ளை தம்பதியர், நவரத்தினம் நவபாக்கியம் தம்பதியரின் அன்புப் பெயர்த்தியும் சிவானந்தன் ரதி தம்பதியரின் மகளும், அரியபுத்திரன் அருணன், செல்வி அருணன் தம்பதியரின் அன்பு மருமகளும்,அயந்தன் அவர்களின் மனைவியும்,அருண் சிவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,பிரியா(பிரித்தானியா), அஷ்வினி(அவுஸ்திரேலியா), வேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரகு- சசிகலா(பிரித்தானியா), ரவி- அவந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் மருமகளும்,சிவமகேந்திரன்- […]

நாடு முழுவதும் பலர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29 ஆயிரத்து 727 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 597 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 218 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, […]

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் – பாப்பரசர் லியோ

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் “துணிச்சலை” வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாப்பரசர் லியோ (Pope Leo XIV) வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “ஆயுதங்களின் முழக்கம் ஓயட்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையான மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் துணிச்சலைப் பெற […]

கனடாவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை

கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா என்பவர் அவரது ஆண் நண்பரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டொரன்டோ ஸ்கார்போரா பல்கலை வளாகம் அருகே 20 வயதான இந்திய மருத்துவ மாணவர் ஷிவாங்க் அவஸ்தி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது இந்தியர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைலேன்ட் க்ரீக் […]