வடமராட்சியில் புனரமைக்கப்படுகின்ற 23 வீதிகள்

தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் அனர்த்தத்துக்காக விசேட மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை (PSDG) நிதி ஊடாக வடமராட்சியில் புனரமைக்கப்படுகின்ற 23 வீதிகளையும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான றஜீவன் நேற்று பிற்பகல் நேரடியாக சென்று பார்வையிட்டார். இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு வீதிகளும் புரைமைக்கப்படும் என்றும் இங்கு கருத்து தெரிவித்தார்.

அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சு நடத்தினார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தினார். இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. […]

கஸகஸ்தானில் இருந்து ஏர் அஸ்தானா விமானம் இலங்கை வந்தது!

ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தது. கஸகஸ்தானின் அல்மாட்டி (Almaty) சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா (Air Astana) நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், இன்று மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான […]

தேசிய தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா நேற்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களின் துரிதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூங்கா நிலப்பரப்பில் அபாயகரமான அறிகுறிகள் தென்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பது, அபாய எச்சரிக்கை பலகைகள் மூலம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, […]

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர் மாயம்

நாட்டைத் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி முதல் அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு […]

விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து நிழற்குடை

கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து நிழற்குடை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறப்பு விழா நிகழ்வு நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் (25.12.2024) அன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப்பணிமனை அருகில் A9 வீதியில் இந்த விபத்து சம்பவத்திருந்தது. கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மது போதையில் தவறாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தில் மோதுண்டு […]

காணாமல் போயிருந்த இளைஞர் சடலமாக மீட்பு

சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் சுமார் 9 நாட்களின் பின்னரே அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 28 வயதான அந்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணைகளின் போது […]

ஜனவரி மாதம் அழகுசாதனப் பொருட்கள் குறித்து நடவடிக்கை

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதை தெரிவித்துள்ளார். தற்போது இந்த சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் செயல்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக […]

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காரணத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரி – 56 ரக துப்பாக்கியுடன் வயோதிபர் கைது

ரி – 56 ரக துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொழும்பு – கிராண்ட்பாஸ் ஜோசப் வீதி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.