46 ஓட்டங்களால் இங்கிலாந்தை விட ஆஸி.முன்னிலை

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 124 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆரம்ப நாளன்று ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 20 விக்கெட்கள் சரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த விளையாட்டரங்கில் 1902இல் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப நாளன்று 25 […]

இலங்கைக்கான வியட்நாம் தூதுவரும் அமைச்சர் நளிந்தவும் சந்திப்பு

இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது […]

பிரதேச செயலகத்துக்கு முன்பாக உயிர்மாய்க்க குடும்பஸ்தர் முயற்சி

அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உயிர்மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை பிரதேச மக்கள் விரைந்து செயற்பட்டு, காப்பாற்றி, அவரை நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா கைது

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு மீண்டும் ஒரு சூறாவளி அபாயம்!

‘டித்வா’ சூறாவளி போன்று எதிர்காலங்களிலும் பாரிய சூறாவளி ஏற்படலாம் என அவுஸ்திரேலியாவின் மேற்கு பல்கழைக்கலகத்தின் பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி, இலங்கையில் சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியவராவார். அத்துடன் கடல்சார் ஆராய்ச்சிக்கான அறிவியலில் பட்டம் பெற்றுக் கொண்ட முதல் இலங்கை பேராசிரியரும் ஆவார். மேலும் அவுஸ்திரேலியாவில் சிறந்த விஞ்ஞானிக்கான பட்டத்தையும் பெற்றுக் கொண்டவராவார். இணையத்தினூடாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]

தங்க விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் இன்று (26) பிற்பகல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்டுள்ளது. இருப்பினும் பிற்பகலுக்குப் பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபா அதிகரித்துள்ளது. அந்த வகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாகவும், விற்பனை […]

கடலில் நீந்திக் கொண்டிருந்த மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிகம காவல் பிரிவின் மிரிஸ்ஸ பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவர் சுற்றியுள்ள மக்களால் மீட்கப்பட்டு, அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர் வெலிகம வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த 49 வயதான தேஜன் ஜெயசேகர என்ற மருத்துவர் […]

விபத்தில் சிறுமி உயிரிழப்பு

அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியுள்ளார். விபத்தில் காயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், அங்கு சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் சுனாமி நினைவு தினம்

21 வது சுனாமி நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து தேசிய கொடியினை முள்ளியான் கிராம அலுவலர் […]

பேருந்து மோதி பெண் ஒருவர் மரணம்!

இந்த விபத்து எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர் இரத்தினபுரி […]