ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்களுக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து, சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தக் குழுவில், இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இரத்தினம் வெட்டுதல் மற்றும் மேம்படுத்துதல் (cutting & polishing) பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் […]

மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு கோரிக்கை

‘தித்வா’ சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மலையக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்துவரும் சில வாரங்களில் அவர்களது புனர்வாழ்வுப்பாதை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றித் தெளிவில்லாமல் இருப்பது, அம்மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் மனவழுத்தத்தையும் தோற்றுவித்திருப்பதாக மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் நிவாரணமும், மீள்கட்டுமானமும், புனர்வாழ்வும் உரிய முறையில் அம்மக்களைச் சென்றடைந்து, அம்மக்கள் பாதுகாப்பான சமூகமாக மீண்டெழுவதற்கு அவசியமான விடயங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என அக்கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மலையக […]

இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்புரிமையிலிருந்து சின்னராசா லோகேஸ்வரன் நீக்கம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கரைத்துறைப்பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி வசமானதை அடுத்து அதன் தவிசாளராக நியமிக்கப்பட்ட சின்னராசா லோகேஸ்வரன், அண்மையில் வேறொரு ஒழுங்கீனப் பிரச்சினை காரணமாக அப்பதிவியிலிருந்து இராஜினாமா செய்தார். அதனையடுத்து நடைபெற்ற தவிசாளருக்கான போட்டியில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது. இருப்பினும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான […]

இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி – விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

கடந்த 21.12.2025 அன்று குறிப்பிட்டது போன்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 21.12.2025 அன்று குறிப்பிட்டது போன்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை […]

அம்பலாங்கொடை கொலைக்கு பின்னணியில் பெண்?

அம்பலாங்கொடை பிரதேசத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய விசாரணைகளில் இருந்தே பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இதன்படி, வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என்பவர் இந்தக் கொலையைத் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை சமீபத்தில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேகநபர்களை […]

எதிமலையில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை

எதிமலை – கொட்டியாகல பகுதியில் 02 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, பெருமளவான கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (25) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3,754 கஞ்சா செடிகளும், ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 3602 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. குறித்த கஞ்சாச் செய்கைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய எதிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த தசாப்தங்களில் தமிழகம்; ‘ஆர் எம் வி : தி கிங் மேக்கர்’

கடந்த தசாப்தங்களில் தமிழகத்தின் அரசியல் – சினிமா – ஆன்மீகம்- தொழில் வளர்ச்சி- சமூக மேம்பாடு – போன்ற துறைகளில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கி இன்றும் லட்சக்கணக்கான தமிழர்களால் ‘அருளாளர்’ என போற்றப்படும் மறைந்த ஆர். எம். வீரப்பனின் சுயசரிதையை ‘ஆர் எம் வி: தி கிங் மேக்கர் ‘ எனும் பெயரில் ஆவணப்படம் தயாராகி இருக்கிறது. இந்த ஆவண படத்தை சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து […]

பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்கும் ‘காதல் ரீ செட் ரிப்பீட் ‘

நடிகர் மதும்கேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காதல் ரீ செட் ரிப்பீட் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னை நினைத்தே..’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காதல் ரீ செட் ரிப்பீட்’ எனும் திரைப்படத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியோ சங்கர், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் […]

நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ தி பெட் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி பெட் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான மோகன் ஜி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் மணி பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பெட் ‘ எனும் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், தேவிப்பிரியா, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மாற்றல்’

‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ இம்மாற்றல் ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ இம்மாற்றல் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கயாடு லோகர், டி எம் கார்த்திக் ,குமார் […]