ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பின் முதல் பேராலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்…
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய யேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன. புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தனின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன. இதன்போது யேசு பிறப்பினை குறிக்கும் […]
தையிட்டியில் விகாரைக்காக அபகரிக்கப்பட்டது காங்கேசன் துறையிலுள்ள தமிழ் மக்களின் காணி!
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை காணி, காங்கேசன் துறையிலுள்ள மக்களுக்கு சொந்தமானதாகும் என நாகதீபம் ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடபில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தையிட்டியில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் விகாரைக்கு அருகிலே உண்மையான திஸ்ஸ விகாரை அமைந்துள்ளது. அது நாகதீபம் ரஜமா விகாரைக்கு சொந்தமானதாகும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் பொது மக்களின் காணியை அடாவடியாக பிடித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகும். […]
நுவரெலியா நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
டிட்வா சூறாவளியால் நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தங்களில் பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் ஓரளவு சுற்றுலாப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக காணப்பட்டது. நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பின்னர் நுவரெலியாவில் முக்கிய சுற்றுலா பகுதியைச் சுற்றி பல புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளை […]
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ […]
குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது
கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து
திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தினால் சுமார் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் கிளர்ந்தெழுவோம்!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்தாவது, “திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து, அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசமிருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களைப் […]
கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் ஜப்பானில் கைது
ஜப்பானில் திங்கட்கிழமை பொது இடத்தில் கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாள் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மினாடோ-குவில் உள்ள ஷினகாவா நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றுக்கு வெளியே குறித்த இலங்கையர் அவரது கழுத்தில் கத்தியை அழுத்திக் கொண்டிருந்துள்ளார். இனால், அவரின் கை மற்றும் கழுத்தில் இரத்தப்போக்கு காயங்கள் ஏற்பட்டன, ஆனால் அவர் மயங்கி விழவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் ‘ மைசா ‘
வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ மைசா ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி கிளர்வோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைசா ‘ எனும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரேயாஸ் பி கிருஷ்ணா ஒளிப்பதிவு […]