நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஊடக சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியினுடைய ஒற்றையாட்சிக்குள்ளே தமிழ் அரசியலை முடக்குகின்ற நிகழ்ச்சிநிரலுக்கு தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணைபோகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (23) கொழும்பில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்று (24) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் கொழும்பு இல்லத்தில் செய்தியாளர் […]

13,000 கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக உயர்மட்டக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக அமைச்சர், பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், சுங்கத்தின் பிரதான அதிகாரிகளுடன் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்திலே 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை மேலதிக சுங்க ஆய்வு மையமாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. அரசு நிறுவனங்களின் ஒப்புதல் தேவைப்படும் கொள்கலன்களை புதிய யார்டில் நிறுத்தி […]

முல்லைத்தீவு மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்புக்கு நீதிவேண்டும்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் தவறு என்றும் சிறுமி உயிரிழப்பிற்கு சரியான நீதிவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தையில் கடந்த 20.12.2025 அன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 12 அகவை சிறுமி ஒருவர் 21.12.2025 அன்று உயிரிழந்துள்ளார். எனவே, இந்த சிறுமி உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்படவேண்டும் என சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த […]

கனடாவின் அல்பர்ட்டா தனி நாடாகப் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு!

கனடா நாட்டின் ஓர் அங்கமாக இருக்கும் அல்பர்ட்டா (Alberta) மாகாணம், ஒரு தனி நாடாகப் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்த ‘பொதுவாக்கெடுப்புக்’ (Referendum) கேள்வியை அல்பர்ட்டா தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான முதல் கட்டமாக, முன்மொழியப்பட்ட அதிகாரப்பூர்வக் கேள்விக்குத் தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது. “அல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்திவிட்டு, ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?” என்ற கேள்வி மீது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அனுமதியே, தற்போது […]

பனிப்பொழிவோடு கியூபெக்கில் கிறிஸ்துமஸ் பண்டிகை!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காலத்தில் கியூபெக் மாகாணம் முழுவதும் பனிப்பொழிவு (Snowfall) தொடங்கியுள்ளது. இதனால் கியூபெக் மக்கள் இந்த ஆண்டு ஒரு அழகான ‘வெள்ளை கிறிஸ்துமஸை’ (White Christmas) கொண்டாடுவது உறுதியாகியுள்ளது என கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (ECCC) தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் கியூபெக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது கியூபெக் நகரத்தில் இங்கு 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் விடுதலை என்பது பிறருக்கு தான் தன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அல்ல; ஈவெராவின் வேஷங்களை அறியுங்கள் – இஸ்லாமிய பெண் கண்டனம்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் தாரிகா சல்மான், ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது, ஈ.வெ.ரா குறித்து இவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. தாரிகா சல்மான் பேசியதாவது: என் மண்ணில் வந்து பெண் அடிமையை சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. வேலு நாச்சியார், வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டையிட்டார். அவர் காலத்தில் பெண் அடிமையை யார் உடைத்தது? யார் பெண்களுக்கு தைரியத்தை கொடுத்தது? அவர் கையில் வாளை கொடுத்து சென்று, வென்று வா என வேலு நாச்சியாரை ஈ.வெ.ரா அனுப்பி வைத்தாரா? […]

கனடா போஸ்ட் நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது!

கனடா போஸ்ட் (Canada Post) நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர் சங்கத்திற்கும் (CUPW) இடையே நிலவி வந்த நீண்டகாலப் பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின், புதிய 5 ஆண்டுகாலத் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 42,000 தபால் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் கணிசமாக உயரும் என்று கூறப்படுகின்றது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் வருமானத்தைப் பாதுகாக்க இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. […]

ஒண்டாரியோ மாகாணத்தில் ஆசிரியர் கல்வியில் மாற்றங்கள்?

ஒண்டாரியோ மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, ஆசிரியர் கல்வித் திட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர ஒண்டாரியோ மாகாண அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கல்லூரியில் படிக்கும் காலத்தைக் குறைத்து, பள்ளிகளில் நேரடியாகப் பணியாற்றும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகள் 2026-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று ஒண்டாரியோ கல்வி அமைச்சர் Paul Calandra தெரிவித்துள்ளார். ஒண்டாரியோவில் தற்போதுள்ள ஆசிரியர் பயிற்சி முறை, நாட்டிலேயே மிகக் குறுகிய காலத்தைக் கொண்டது என்பது […]

2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை இரண்டு […]

வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சருடன் சுமந்திரன் எம்.பி கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றைய தினம் நடைபெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களை விளக்கினார். இச்சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்ட விடயங்கள் வருமாறு: * மனிதாபிமான உதவிகள்: அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து […]