போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்!
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர் சமுதாயத்தை நாம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் […]
பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றம் செல்வார்களா?
நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தற்போது உயர்நீதிமன்றம் செல்வார்களா என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே கேள்வியெழுப்பினார். கொழும்பில் உள்ள மக்கள் போராட்ட அமைப்பின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளருக்கு எதிராக கவனயீர்ப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர், ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராம சேவையாளருக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை நேற்று (21.12.2025) முன்னெடுத்தனர். 100இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம சேவையாளர் நேரில் சென்று பார்வையிடவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தமது நிலமையினை பார்வையிடுமாறு தொலைபேசியூடாக கேட்ட குடும்பப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை […]
இன்றைய வானிலை
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடமேல் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் […]
புத்தூரில் விபத்து; ஒருவர் பலி- ஒருவர் கவலைக்கிடம்
யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (2025.12.21) மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ள நிலையில் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் அதிவேகமாக பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகினர். இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக […]
வேலன் சுவாமிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட தரப்பினர் அடாத்தாக கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்படும் போது, பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக விண்வெளி சென்ற மாற்றுத்திறனாளி
விண்வெளிக்கு முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சென்று சாதனை படைத்துள்ளார். ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இந்த பயணத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். விண்வெளிக்கு புறப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில், ஜேர்மனியை சேர்ந்த ஐரோப்பிய […]
தையிட்டி சம்பவம் கண்டிக்கத்தக்கது – சிறீநேசன் எம்பி
தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளும் பொலிஸார் இந்து மதகுருவினை நடாத்திய விதம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முற்போக்கான சில விடயங்களை பாராட்டிக் கொண்டிருக்கும்போது பிற்போக்கான, மூர்க்கத்தனமான, கடந்த ஆட்சிக்காலத்தில் […]