பயங்கரவாத தடைச்சட்டம் – அரசின் இரட்டை வேடத்தை சாடும் ராஜ்குமார் ரஜீவ்காந்த்
இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், தற்போது அதைவிடவும் மோசமான ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற “மக்கள் போராட்ட முண்ணனியின்” ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்… தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்… ஜனநாயக விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு பயங்கரவாத தடைச்சட்டம் […]
தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும் யாழ். கத்தோலிக்க தேவாலயத்தையும் உடைக்க வேண்டும் – அர்ச்சுனா
நேற்றைய தினம், யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். தையிட்டி போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளமை, தற்போது உள்ள நிலைமையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சுனா, நல்லூர் கோயில் கர்ப்ப கிரகத்தில் முஸ்லிம் சமாதி உள்ளது, அதையும் உடைக்க […]
தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்த தேவையான பயிற்சித் திட்டங்கள்
சுகாதாரத்துறையினரின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் விசேட டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இருதய தொழில்நுட்பம் தொடர்பான உயர் டிப்ளோமா பாடநெறியை (2025) வெற்றிகரமாக நிறைவு செய்த 351 இருதய வரைபு தொழில்நுட்பவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். […]
வெருகலில் வௌ்ளம்
வெருகல் பிரதேசம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியுள்ளது. மன்னம்பிட்டி ஊடாக வௌ்ளிக்கிழமை (19) மாலை முதல் வரத்தொடங்கிய மகாவலி கங்கையின் அதிக நீர் வரத்தினால் தற்போது வெருகல் பிரதேசம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பிரதேசத்தின் உள்ளக வீதிகள்,குடியிருப்பு பகுதிகள்,பிரதான வீதி என்பன தற்போது வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை மதுபான விடுதிக்கு வெளியே நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் பெக்கெர்ஸ்டால் பகுதி உள்ளது. இங்குள்ள மதுபான விடுதிக்கு வெளியே அதிகாலை 1 மணியளவில் பலர் கூட்டமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு கார்கள் வேகமாக வந்து சட்டென நின்றுள்ளன. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார்களில் இருந்த […]
சுட்டெரிக்கும் வெயிலுக்கு பெயர் போன சவூதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு
சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மற்றும் ட்ராஜெனா மலைப்பகுதிகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளிக்கின்றன. மலைச்சிகரங்கள் மற்றும் மணல் குன்றுகள் மீது பனி கொட்டிக் கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த […]
காசாவின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பலஸ்தீனம் அமைந்துள்ளது. மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், உலக எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் புதிய குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்த புதிய குடியேற்றங்களில் […]
முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொடர்பான வழக்கில், விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுத் துறைக்குழு, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை செய்யும் இந்தக்குழு நாளை, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து திரும்பிய இந்தக் குழுவுடனான கலந்துரையாடல், வழக்கின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதையும் தேவையான வழிகாட்டுதல்களை […]
டிசம்பர் இறுதிக்குள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 29ஆம் திகதிக்குள் முழுமையாக மீண்டும் தொடங்கும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.எம்.டி.மதுஜித் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா சூறாவளியின் தாக்கத்தால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் 3 பீடங்களின் நடவடிக்கைகள் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ பீடம், இணை சுகாதார பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவை தேர்வு நடவடிக்கைகள் காரணமாக […]
அனர்த்தங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது
இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்நாட்டு சந்தையில் தேயிலை விலையில் எவ்வித அதிகரிப்பும் இல்லை. எனினும் பெருந்தோட்டப் பகுதிகளில் […]