வெள்ளவத்தை கட்டுமான தளத்தில் விபத்து ; வாகன உதவியாளர் பலி

வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். களனி, ஈரியவெட்டிய, எண் 537 ஐச் சேர்ந்த 61 வயதான எஸ்.ஏ. சரத் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனத்தால் கட்டுமானத்தில் உள்ள மாடி கட்டிடத்திற்காக கொண்டு வரப்பட்ட பைலிங் இயந்திரத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது திடீரென மூவர் […]

லொஹானின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் குடிபோதையில் நுழைந்த தமிழ் கைதி ஒருவரை சுட்டுக் கொல்ல முடியும் என்று கூறி, அவரை கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் மரணச் சான்றிதழை ஜனவரி 22ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சரின் பிணையில் கையெழுத்திட்ட பிணைதாரர்கள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் […]

120 பொருளாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

உலக முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழு, டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன் செலுத்துதல்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட 120 உலக முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, நாட்டின் திருப்பிச் செலுத்துதல்களை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு மீட்டெடுக்க புதிய […]

கனடாவில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்

மொன்றியல் நகரின் பல முக்கிய இடங்களில் ‘தட்டம்மை’ (Measles) வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனப் பொது சுகாதாரத் துறை இன்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கியூபெக் மாகாணத்தில் இதுவரை 8 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்புள்ள நபர்கள் சென்ற இடங்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு அறையில் பாதிப்புள்ள நபர் இல்லாவிட்டாலும் கூட, அவர் விட்டுச் சென்ற தட்டம்மைக் கிருமிகள் 2 மணிநேரம் வரை காற்றில் உயிர்வாழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை பரவலைக் கட்டுப்படுத்தப் […]

யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

மொன்றியலுக்கு அருகிலுள்ள செயிண்ட்-யூஸ்டாச் (Saint-Eustache) பகுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு சுமார் 11:11 மணி அளவில், ‘கோர்போ வீதியில்’ (Corbo Street) உள்ள ஆறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் குடியிருப்பின் அடித்தளத்தில் (Basement) உள்ள ஒரு வீட்டில் இருந்துதான் தீ பரவத் தொடங்கியுள்ளது. […]

2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் இலக்குகளை கனடா எட்டுவது கடினம்!

கனடா தனது 2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவது கடினம் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். “இங்கு அதிகப்படியான சட்டதிட்டங்கள் உள்ளபோதும் போதிய செயல்பாடுகள் இல்லை” என்று அவர் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கொள்கைகளை விமர்சித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில், கனடாவின் தற்போதைய பருவநிலை மாற்றக் கொள்கைகளில், ஏற்படவுள்ள மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார். கார்னி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நுகர்வோர் மீதான கார்பன் வரியை ரத்து செய்தார். இது […]

ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு

மொன்றியால் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (YUL) நடைபெற்று வரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடத் தட்டுப்பாடு காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் பயணம் செய்வோருக்கு விமான நிலைய நிர்வாகம் (ADM) அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. எந்த நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு பயணிகள் கோரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் முக்கிய அடையாளமாக இருந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi-level parking) […]

‘பிறப்பு சுற்றுலா’ விகிதங்கள் கனடாவில் உயர்வு

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையாக குறைந்திருந்த ‘பிறப்பு சுற்றுலா’ விகிதங்கள், தற்போது கனடாவில் மீண்டும் உயர்ந்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் படி, கனடிய மருத்துவமனைகளில் குடியுரிமை இல்லாதவர்களால் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் அடங்குவர். இந்த வகை பிறப்புகள் 2024-இல், தொற்று முன் இருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. தற்காலிக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வரும் […]

கனடாவில் டெய்லி பிரெட் உணவு வங்கியின் தொண்டு நிகழ்வு

கனடாவில் நேற்று நடைபெற்ற டெய்லி பிரெட் உணவு வங்கியின் கிறிஸ்துமஸ் உணவு வரிசை தொண்டு நிகழ்வில் ஒன்டாரியோவின் பிரதமர் டக் ஃபோர்டு (Doug Ford) இணைந்து கொண்டார். ‘ மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த விடுமுறை காலத்தில் உணவு உதவிகள் தேவைப்படும் குடும்பங்களை ஆதரிக்க நீங்கள் செய்யும் பேருதவிக்காக உங்கள் குழு மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி’ அவர் என தனது சமூவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசாங்கம் கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்வதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டவில்லை – நாமல் ராஜபக்ச விமர்சனம்

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும், அரச நிறுவனங்களுக்காகவும் மிகக்குறுகிய காலத்தில் பெருமளவிலான கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்ய எடுக்கும் முயற்சிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விரைவான வாகன இறக்குமதி: பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பே, வெறும் 12 நாட்களுக்குள் 1,700-க்கும் மேற்பட்ட கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கான நிவாரணத்தில் தாமதம்: வாகனங்களை இறக்குமதி செய்வதில் காட்டும் அதே வேகத்தையும் […]