வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் அடித்துக் கொலை!

வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் சமீபத்தில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மைமென்சிங் நகரை சேர்ந்தவர் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27. இவர் அங்கு உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவாமி லீக் கட்சியினரால் சுடப்பட்ட வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் […]

ஜனநாயகம் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டின் மீது மோடி அரசு புல்டோசரை ஏற்றியுள்ளது

விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இம்மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ”இது வளர்ச்சியல்ல, அழிவு” என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்ட மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், […]

மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார். இது குறித்து நியூசி., பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது; தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி 95 சதவீதம் குறைக்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஏற்றுமதி ரூ.9,863 கோடியில் இருந்து ரூ.11,650 கோடியாக […]

விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்

டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன், திருப்பதியில் வழிபாடு நடத்தினார். அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், […]

பாடசாலைகளில் தேசிய மற்றும் மாகாண என்ற வேறுபாடு வேண்டாம்

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வட மாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், […]

பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பே பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியை கடத்த உதவிய உதவிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மாதம்பே கலஹிடியாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறிய லொறியும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி எனவும் 18 ஆம் திகதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாக […]

வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகளில் மிதக்கும் சடலங்கள்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, கம்பளை-துனுகேஉல்ல பிரதான வீதியில் உள்ள இஹலகம மயானத்திலுள்ள சடலங்களின் எச்சங்கள் வெளி வந்துள்ளமையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாயனத்தில் புதைகப்பட்ட சடலங்களின் சிதைவுகள் சவப்பெட்டிகளுடன் பல நாட்களாக வீதியில் கிடப்பதால் அந்தப் பகுதி அச்சம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அதனை சரிசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 27 ஆம் […]

வான் பாய்ந்தாலும் வௌ்ள அபாயம் இல்லை

மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ஆற்றுப் படுக்கையில் உள்ள சில நீர்த்தேக்கங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளரும், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளருமான எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். அத்துடன், அனுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிகமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு உயர்வாகக் காணப்பட்டாலும், அனுராதபுரம் மாவட்டத்தில் பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையிலும், சிறிதளவு மழைவீழ்ச்சி நிலவினாலும், […]

விஷேட செயற்பாட்டு அறை

தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம் முடியும் வரை செயற்பாட்டு அறை செயல்படும், அத்துடன் முப்படைகள் மற்றும் பொலிசாரின் நெருக்கமான ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைப்பு மையமாகவும் இது செயல்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறையானது, ஏற்படக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு அல்லது அவசரகால சூழ்நிலைகளுக்கும் விரைவான மற்றும் பயனுள்ள பதிலை உறுதி செய்வதை […]

எம்.பி தாக்கியதில் கான்ஸ்டபிளுக்கு காயம்

கொலொன்ன பொலிஸ் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 20.12.2025 அன்று இரவு 08.40 மணியளவில், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழு ஒன்று களுகல கோயில் அருகே அவரைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றது. அன்று இரவு […]