இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பை வந்தடைந்தார்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி சு.ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயமானது இந்தியாவின் […]

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

கல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் “ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும்” இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (22) ‘இசுருபாய’ கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடல் 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் அதிகரிப்பதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் […]

அரசாங்கத்திடமிருந்து பொலிஸாரைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் – உதய கம்மன்பில

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில இன்று (22) எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து பொலிஸாரைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் கஞ்சா பயிர்ச்செய்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான கதைகளைக் கூறி வருகின்றது என்று தெரிவித்துள்ளார். தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் […]

‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படவில்லை; இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் – சரத் வீரசேகர காட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்றைய தினம் (2025.12.22) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: “புதிய பயங்கரவாத […]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; மக்கள் கருத்துக்களுக்கு அழைப்பு

  இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, அதற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான 11 பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்தப் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்சமயம் இச்சட்டமூலம் சிங்களம், […]

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் […]

மேலும் ஒரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்டதால் வங்கதேசத்தில் பதற்றம்

வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. கடந்த 18ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவரம் வெளியானவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது. மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது. இந் […]

தற்போதைய சூழலில் உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய நான்கு […]

சர்வதேசக் கடற்பரப்பில் தடைகளை மீறிச் சென்ற வெனிசுலாவின் மூன்றாவது எண்ணெய் கப்பலை துரத்தும் அமெரிக்கா

வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் தடைகளை மீறிச் சென்ற மூன்றாவது எண்ணெய் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படை துரத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களைத் தடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் சுமார் 100 […]

திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக அரசைக் கண்டித்து ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், பாஜ போன்ற கட்சியினரும் அங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தீபத்தூண் விவகாரம் தொடர்பான […]