இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் […]
அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மாநகர சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் இல்லாமல் ஹட்டன்- டிக்கோயா நகர சபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க ஹட்டன்- டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். ஹட்டன்- டிக்கோயா நகர சபை எல்லைக்குள் உள்ள சில குழுக்களின் கட்டுமான நடவடிக்கைகள், மாநகர சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் பெறாமல், […]
மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருடங்கள் சிறை
மூன்று முறை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
சோண்டர்ஸ் – நிகம்போ யூத் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற பி குழு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் அநுராதபுரம் சொலிட் கழகத்தை 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் தனது முதலாவது வெற்றியை சுவைத்தது. சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியை சமநிலையில் முடித்தது நிகம்போ யூத் சோண்டர்ஸ் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய ஏ குழுவுக்கான போட்டி 2 – 2 என்ற கோல்கள் […]
பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் டியர் ஸ்டீகன்?
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லா வினவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வில்லாவின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸின் அண்மைய முதுகுப் பிரச்சினைகள் குறித்து அக்கழகம் கவலையடைந்துள்ளதுடன், அவரை பிரதியிட 33 வயதான டியர் ஸ்டீகன் தகுதியானவரெனக் கூறுகிறது. உலகக் கிண்ணத்தில் ஜேர்மனியின் கோல் காப்பாளராக முதன்மைத் தெரிவாக வேண்டி போட்டி நேரத்தை டியர் ஸ்டீகன் விரும்புகின்ற நிலையில் இன்னொரு லா லிகா […]
மகளிர் சர்வதேச ரி20; இலங்கையை வென்றது இந்தியா
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் […]
வெருகல் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுதலை!
வெருகல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை (22) மூதூர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கானது மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி வசீம் அஹமட் முன்னிலையில் இன்றைய தினம் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குற்றவாளிகள் தரப்பில் முன்னிலையாகிய சகிதீன் மற்றும் முகமட் ஆகிய சட்டத்தரணிகளால் பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டில் […]
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில், மெளன்ட் மகட்டரேயில் வியாழக்கிழமை (18) ஆரம்பித்து இன்று திங்கட்கிழமை (22) முடிவுக்கு வந்த மூன்றாவது போட்டியையும் நியூசிலாந்து வென்று 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து நியூசிலாந்து: 575/8 (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே 227, டொம் லேதம் 137, றஷின் றவீந்திர […]
இந்த ஊழலற்ற ஆட்சியில் கிழக்கில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் டனுசன் தெரிவித்துள்ளார். “நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” என்ற தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சுயாதீன செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். திருகோணமலையில் ஒன்றுகூடிய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இணைந்து இச்செயலணியை உருவாக்கியுள்ளனர். […]
தையிட்டி சம்பவம்: பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும் – மணிவண்ணன்
தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின்போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர். மதகுருவான வேலன் சுவாமிகளை […]