விசேட அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்: அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, […]

கொள்ளைக் கும்பல் கைது

கண்டி – பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை பகுதியில் நகை கடை ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள், கறுப்பு நிற முகமூடிகள், பிளாஸ்டிக் கைவிலங்குகள், சுத்தியல்கள், குறடு, விளையாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்கள் ஆகியவற்றை பன்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. […]

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு

நுகேகொடை – கொஹூவல பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 25 வயதுடையவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மற்றும் கொஹுவலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கொழும்பு மாநகர சபையில் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சர்வஜன அதிகாரம் கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகள் இதன்போது தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

‘ஹாப்பி ராஜ்’ படத்தின் அறிமுக காணொளி

முன்னணி இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹாப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அறிமுக இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் , ஸ்ரீ […]

திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’

தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் நட்சத்திர துடுப்பாட்ட அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயரிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு நடிகர் ஆர்யா கப்டன் ஆக பணியாற்றுவார் என்றும், இந்த நட்சத்திர துடுப்பாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரசிகர்கள் திரைத்துறை மற்றும் துடுப்பாட்ட விளையாட்டை அதிக அளவில் ரசித்து கொண்டாடுவார்கள். அதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் […]

‘ பூக்கி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் – நடிகர்- இயக்குநர்- பாடலாசிரியர் – பாடகர் – படத்தொகுப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பூக்கி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘லவ்வுல நீ வுழுந்தா.. எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ பூக்கி ‘ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, அஜய் திஷான் ஆர். கே. தனுஷா , பாண்டியராஜன், சுனில் , லட்சுமி மஞ்சு, […]

‘மொய் விருந்து’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சிறந்த நடிப்பிற்காக இரு முறை தேசிய விருதினை வென்ற மூத்த நடிகை அர்ச்சனா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘மொய் விருந்து ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் சி. ஆர் .மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மொய் விருந்து’ எனும் திரைப்படத்தில் அர்ச்சனா, ரக்சன், ஆயிஷா, அருள்தாஸ், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ். கே. […]

தையிட்டியில் வேலன் சுவாமிகள் மீது தாக்குதல் – சைவ மகா சபை கண்டனம்

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரை விவகாரத்துக்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சத்தனமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது. சைவ மகா சபையின் கண்டன அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சமனாக மதிக்கவேண்டிய […]

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையம்

ஃபுகுஷிமா மாகாணத்தில் 2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவினால் சேதமடைந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோவிலிருந்து வடமேற்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டோக்கியோ மின்சார நிறுவனத்தின் (TEPCO) காஷிவாசகி கரிவா அணுமின் நிலையம், 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவினால் மூடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெப்கோ ஆலையின் ஏழு அணு […]