22 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22,19209 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் […]
ஜே.வி.பி. கட்சி கொள்கைகளில் இருந்து திசைமாறிவிட்டது!
மக்கள் விடுதலை முன்னணியானது (ஜே.வி.பி.) அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியை […]