ஐந்து மீனவர்களுடன் படகொன்று காணாமல் போயுள்ளது

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்த படகிலிருந்த ஐந்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அன்று முதல் […]

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்; கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கு பிணை

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் […]

சந்திரகுமார் – சிவஞானம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

தமிழரசு கட்சியின் தலைவர் சி.விகே. சிவஞானம் மற்றும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துளள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் சமத்துவக் […]

மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப்பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சிகளை நடத்துவது முக்கியமான பணி

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நமது நாட்டிற்கு கடன் மீளச்செலுத்தும் சலுகைக்காலம் தேவைப்படுவதால், IMF ஒப்பந்தத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே IMF கூறியிருந்தது. ஆனால் அப்போதைய அரசாங்கம் 2028 தொடக்கம் கடனை […]

இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

திருக்கோயில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்கள் ஊடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் 2025.12.19 ம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் என்றும் தமக்கு […]

த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கத் தயாராகும் விஜய்!

சட்டசபை தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிக்கும் தலா 3 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். இதில், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பெண்கள், பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான பணிகளை த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா பாணியில் […]

காலி முகத்திடலில் விசேட ‘பொதுமக்கள் உதவி சேவை நிலையம்’

காலி முகத்திடலில் விசேட ‘பொதுமக்கள் உதவி சேவை நிலையம்’ பண்டிகைக் காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதிக்கு வரும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாளை (21) முதல் காலி முகத்திடலில் விசேட “பொதுமக்கள் உதவி சேவை நிலையம்” ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டுப் பங்களிப்புடன் இயங்கும் இந்த நிலையத்தின் ஊடாக, பொதுமக்களுக்குத் […]

பாரதிய ஜனதா தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு நேற்று (20) நடைபெற்றது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான ‘கமலாலயத்தில்’ இச்சந்திப்பு இடம்பெற்றது. காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் […]

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தவும், மக்கள் மற்றும் வணிகங்கள் அவற்றை இலகுவாகவும் வினைத்திறனாகவும் அணுகுவதற்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசாங்க சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தள உருவாக்கம், அரசாங்க நிறுவனங்களுக்கு […]

வெவ்வேறு பகுதி விபத்துக்களில் நால்வர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) யாழ்ப்பாணம், திம்புல-பத்தனை மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஹட்டன் – நுவரெலியா வீதியில் பத்தனை சந்திக்கு அருகில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது மோதியதுடன், இழுத்துச் செல்லப்பட்டு இரண்டு பாதசாரிகள் மீதும் மோதியதில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிகள் […]