சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும்
ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை […]
தகுதியான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது!
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று (21) எதுல்கோட்டேயிலுள்ள தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு வருமாறு: “சுமார் ஒரு வருட காலமாக அரசாங்கத்தினால் ஒரு நிரந்தர கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முடியாமல் போயுள்ளது. அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அரச சேவையில் அரசியல் தலையீடற்ற, தகுதியான அதிகாரிகளையே நியமிப்போம் என்று தேசிய மக்கள் சக்தி மேடைக்கு மேடை கூறியது. ஜனாதிபதியின் […]
அரசாங்கம் மக்களை கைவிட்டுவிட்டது – நாமல் ராஜபக்ச காட்டம்
நாட்டில் நிலவும் இடர்நிலைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். கிராமப்புறங்களில் நிலவும் அரசியல் நெருக்கடி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய மற்றும் கிராம மட்டத்திலான குழுக்களில் அங்கம் வகித்தவர்களுக்கு தற்போது கிராமங்களில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் அவர்கள் வாக்களித்து அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள், மறுபுறம் மக்கள் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்குத் […]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு: நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிய நடைமுறைகள் ஆரம்பம்
கடந்த கால யுத்தத்தின் போது வன்னிப் பிராந்தியத்தில் (கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்) இடம்பெயர்ந்து, பின்னர் 2010-ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கான நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் இழப்பீட்டு அலுவலகம் (Office for Reparations) உருவாக்கப்பட்டது. இருப்பினும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்து நிவாரணங்களைப் பெற்றுள்ளனர். எஞ்சிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் நோக்கில், […]
வைபர் வயரினை மீட்கும் நடவடிக்கை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கிவரும் மொபிட்டல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வயர்கள் வட்டுவாகல் பாலத்தின் கீழாக சென்றுள்ளன. இந்நடவடிக்கை நேற்று (20.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளப்பெருக்கின் போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வைபர் வயரினை மீட்கும் நடவடிக்கை! | Operation Rescue Bilge Wire Swept By Flood இருந்தும் தொலைத்தொடர்பு இணைப்பினை சீர்செய்த குறித்த நிறுவனம் வட்டுவாகல் பாலத்தில் வெள்ளத்தில் […]
அநுர அரசுக்கு சஜித் உபதேசம்
இனியாவது கேலி செய்வதை நிறுத்திவிட்டு செயலில் வேலையைக் காட்டுங்கள், நாட்டுக்கு நல்லது நடந்தால் நாமும் ஆதரவைத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மேலும், “இடம்பெயர்ந்துள்ள மற்றும் வீடற்றிருக்கும் சகல மக்களுக்கும் பாதுகாப்பான காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற இடத்தில் குடியேறியவர்கள் பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகையால், பாதுகாப்பான இடத்தில், காணியில் நல்ல வீடுகளை கட்டி, தங்கள் வீட்டிலிருந்தே வாழ்க்கையை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். […]
போதைப்பொருள் ஒழிப்பு; 846 பேர் கைது
போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 846 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐஸ்கிரீம் விற்பனை மோசடி
சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகப் பழுதடைந்த ஐஸ்கிரீம்களை, உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாகக் கூறி அதற்கான பற்றுச்சீட்டைப் […]
அடிக்கடி மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் […]
பெரும் குழப்பத்தில் பொலிஸ் துறை
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திலுள்ள Police Narcotics Bureau (PNB) கணினி தரவு மற்றும் தகவல்கள் போதை பொருள் மாப்பியாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆழ் கடல் மீன்பிடி படகுகளில் கொண்டு செல்லும் போதை பொருள் தொடர்பில் கண்காணிக்கப்படும் (Vessuls Monitoring System) VMS மற்றும் அது தொடர்பான கணினி தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப்புலனாய்வு துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தகவல்களை […]