பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிரதமர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் விதிகளால் தடைப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2இன் […]
நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள் என இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (19) மதியம் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச […]
ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணங்கள்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக […]
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை அநீதி!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்ததாவது, “புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம். ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்ஷன் […]
பங்களாதேஷில் மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை
பங்களாதேஷில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்துக்களை குறிவைத்து கலவரம் பரவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதை தொடர்ந்து, பொருளாதார […]
பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி!
எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தெமோதரை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், நேற்று மாலை எல்ல 9 வளைவு பாலத்தின் தெமோதரை – எல்ல ரயில் மார்க்கத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவர் பாலத்தில் இருந்து கீழே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் எல்ல […]
வீட்டுக் காவலில் வளிமண்டலவியல் திணைக்களப் பிரதானி – தயாசிறி குற்றச்சாட்டு
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தற்போது “வீட்டு காவலில்” வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தனது குழந்தையுடன் கூட பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசின் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வரலாம் என்ற அச்சத்தினால், பாதுகாப்பு அமைச்சு ஊடாக அவரை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும் தயாசிறி குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை காலநிலை ஆய்வாளர்கள் சங்கம் சமர்ப்பித்த ஏழு பக்க அறிக்கையின் படி, கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அதிகாரிகள் […]
ஒவ்வோராண்டும் ஏற்படும் அனர்த்தங்களால் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் – ரவிகரன் எம்பி
டித்வா புயலினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் நேற்று (19.12.2025) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். சுனாமி, டித்வா என்று தொடரும் பேரனர்த்தங்களுக்கும் மேலாக ஒவ்வோராண்டும் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்படல், சொத்தழிவு ஏற்படல் உள்ளிட்டவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என கோரினார். அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட […]
5.61 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி பாதிப்பு
‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பேரழிவுகளின் தாக்கம் காரணமாக, இலங்கையில் 5,61,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இந்த பேரழிவால் 4 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பாதுகாப்பு அபாயத்தில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை பெறுவது கடினமாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரழிவால் சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை மீளமைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை […]
மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் நீரேந்து பகுதிகளில் இருந்து வரும் மேலதிக நீர்வரத்து காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, திருகோணமலை மாவட்டத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் மீண்டும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக, வெண்டராசன் குளம் மற்றும் கந்தளாய் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளியேறும் மேலதிக நீர் மகாவலி கங்கையில் கலந்து ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.” “கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் கடந்த நவம்பர் […]