இன்றும் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை […]

அவசர நிதியுதவிக்கு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபை அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்திய ‘டித்வா’ புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும். புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு […]

‘நாடே ஒன்றாக’; போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 47000 க்கும் அதிகமானோர் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘நாடே ஒன்றாக’தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 47,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளின் போது, மொத்தம் 47,703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சோதனைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன: ஹெரோயின்: 276 கிலோகிராம் 374 கிராம் ஐஸ் போதைப்பொருள்: […]

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வௌ்ள அபாய முன் எச்சரிக்கை இன்று வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் சில நீரேந்து பகுதிகளில் பெய்த மழை மற்றும் மேல்ப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டமை காரணமாகச் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நேற்று முன்தினம் (18) அறிவிக்கப்பட்டிருந்தது. கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, […]

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தத் தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப்

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார். இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி […]

சிரியாவில் ஐஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்

அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில், ஐஎஸ் போராளிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய சிரியாவில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிப் படைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் […]

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை!

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதியாகியுள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின் போது மது அருந்தியமைக்கான எவ்வித சான்றும் உறுதியாகவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல, தான் செலுத்திய ஜீப் வண்டியில் மோதி காயமடைந்தவர்களுக்கு அனுதாபக் கொடுப்பனவாக பணம் வழங்க விரும்புவதாகத் தமது சட்டத்தரணிகள் […]

தமிழ்த் தேசிய பேரவை திருநாவுக்கரசு வேல்முருகன் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகன் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் 19-12-2025 பி.ப 2.25 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 3.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது. தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம். ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம் ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலை: சுஜித் சஞ்சய பெரேரா எம்.பி குற்றச்சாட்டு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நிவாரணப் பொதியில் உள்ள முரண்பாடுகள் “பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய 25,000 ரூபாயும், சேதமடைந்த உபகரணங்களுக்கு 50,000 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் […]

அரசாங்கம் தனது கட்சி அரசியல்வாதிகளைக் காப்பாற்ற அரச அதிகாரிகளைக் காட்டிக்கொடுக்கிறது – சஞ்சீவ எதிரிமான்ன குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யும் தவறுகளை மறைத்து, அவர்களைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பழியை அரச அதிகாரிகள் மீது சுமத்தி, அதிகாரிகளைக் காட்டிக்கொடுக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சීவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்  நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: அரச அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கும் முயற்சி “ஜனாதிபதி அநுர […]