ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார்!
ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் (ரி20) தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதி சிறந்த 15 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக கேட்போர்கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உப்புல் தரங்க தலைமையிலான தேர்வுக் […]
தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 ஆரம்பம்!
தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 நேற்றைய தினம் (19ஆம் திகதி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமானது. சபாநாயகர் கௌரவ ஜகத் விக்ரமரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ தினிது சமன் ஹேன்னாயக்க ஆகியோரின் தலைமையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜேரத்ன அவர்களின் பங்கேற்புடன் இந்நிழ்வு நடைபெற்றது. அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர். பிரதேச மற்றும் மாவட்ட […]
பொது இடத்தில் எச்சில் உமிழ்ந்து துப்பிய மூவருக்கு அபராதம்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில், மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்து துப்பிய மூவருக்கு 7000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொது மக்களான இருவரும் அடங்கலாக மூவருக்கு எதிராக, புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் […]
பேரவல நிலைமைக்குப் பிறகாவது மலையக மக்களின் காணி பிரச்சினை தீர்வுக்கு அவசர கால சட்டத்தை பயன்படுத்துங்கள்
மலையகத்தில் ஏற்பட்டுள்ள பேரவல நிலைமையின் மூலமாவது மலையக மக்களின் காணி உரிமை கோரிக்கைக்கு தீர்வை வழங்க வேண்டும். தற்போது அவசர கால சட்டம் அமுலில் உள்ளதால் அதன்மூலமாவது தேவையான காணிகளை சுவீகரித்து அந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றலாம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், […]
சேதமடைந்த மத, கலாசார, தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை!
தித்வா புயலால் நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் […]
இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் – அர்ச்சுனா ராமநாதன்
இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தால் எனக்கு கட்டிய பிரித் நூலும், மகாநாயக்க தேரர் கட்டிய பிரித் நூலும் […]
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்த சந்தேகநபர் ஒருவரும், 09 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும், 25 முதல் 41 […]
மத்திய கிழக்கிலும் வெள்ளம்
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு […]
ஜனாபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச
மொட்டுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமலே மீண்டும் களமிறங்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான மற்றும் உறுதியான […]
கனடா – பாகிஸ்தானுக்கான விமான சேவை நிறுத்தம்
பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு இனி நேரடி விமான சேவை கிடையாது என வெளியாகி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு சென்ற பாகிஸ்தான் விமானம் ஒன்றின் பணியாளர்கள் அனைவரும் மாயமாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றது. குறித்த செய்தியில், பணியாளர்கள் அனைவரும் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கனடா சென்ற விமானம் ஒன்று கனடாவின் ரொரன்றோ Pearson சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் […]