2025 பொதுநலவாய சுமோ கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
கொழும்பு, டிசம்பர் 18, 2025 – ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற 2025 பொதுநலவாய சுமோ கிண்ணப் போட்டியில் (Commonwealth Sumo Cup 2025), திறந்த எடைப் பிரிவில் (Open Weight) இலங்கை வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களை சந்தித்தனர். வீராங்கனைகளின் இந்தச் சிறந்த வெற்றியைப் பாராட்டிய அமைச்சர், அவர்களின் எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் 2026 […]
வெள்ளத்தில் மூழ்கியது சரஸ்வதி வித்தியாலயம்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் வெள்ள நீர் புகுந்து உள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ள நிலையில், நோய் தொற்றுகளால் மாணவர்கள் பாதிக்கும் அபாய நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் , பாடசாலை அதிபர் மற்றும் […]
ரணிலுக்கு நெருக்கமான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி நீக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகிக்கும் அரசாங்க வைத்திய உத்தியோகத்தர் என்ற ரீதியில், தனது பொறுப்புக்களை மீறி செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் ஊடகங்களுக்கு அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக்குழுவின் செயலாளரின் […]
கருவேப்பன்குளம் பகுதியில் குடும்பப் பெண் கொலை!
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (19) அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன் […]
எடப்பாடி பழனிச்சாமிக்கும் பேரவைக்கும் இடையில் சந்திப்பு
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு,தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் […]
பசறையில் பெரிய பாறை சரிந்து விழுந்தது
பசறை- மடூல்சீம-மதிகஹதென்ன சாலையில் இன்று வௌ்ளிக்கிழமை (19) அன்று காலை ஒரு பெரிய பாறை சரிந்து விழுந்ததால், சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக மடூல்சீம பொலிஸார் தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் சாலையில் ஒரு பெரிய பாறை விழுந்துள்ளது, மேலும் தொடர்ந்து பெய்யும் மழையால் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அதை அகற்றுவது கடினமாகிவிட்டது என்று வீதி மேம்பாட்டு அதிகாரசபையின் நிர்வாக பொறியாளர் பதுளை எஸ்.எஸ். ஹென்னாயக்க தெரிவித்தார்.
தொடர் கனமழை 3 ஆம் சிவப்பு எச்சரிக்கை
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. இன்று வௌ்ளிக்கிழமை (19) அன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, 32 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 2 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் 18 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தில் […]