சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் […]
வேலையில்லாப் பட்டதாரிகள் சீனாவில் அதிகரிப்பு
விசா மற்றும் வேலைவாய்ப்பு தடைகளால், வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வேலையின்மை பிரச்னை தீவிரமாகியுள்ளது. வெளிநாடுகளில் படித்து முடிக்கும் சீன மாணவர்கள், அங்கு விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால், வேறு வழியில்லாமல் தாயகம் திரும்புகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அவர்கள் வேலை வாய்ப்புகளை தேடவும், தொழில்களை துவங்கவும் உதவிடும் வகையில் ஒரு சிறப்பு தளத்தை சீன அரசு துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், வெளிநாடுகளில் […]
இலங்கை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவதானம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை இலங்கைக்கு சுமார் 675,000 பவுண்ட் மனிதாபிமான உதவி பிரித்தானியாவால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானிய அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் மேலும் நிவாரணம் வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல சர்வதேச நாடுகள் […]
முந்தல் முனை கடற்கரை பகுதியில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்
பாம்பன் அடுத்த முந்தல் முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 9.5 லீற்றர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் பாம்பன் முந்தல் முனை குந்துகால், வேதாளை, மரைக்காயர்பட்டிணம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் படகுகளில் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, […]
குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள்
ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள், தங்கள் குடியுரிமையை கைவிட்டு பிற நாடுகளில் குடியுரிமை பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். குறிப்பாக 2022ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் சுமார் 20 லட்சம் பேர் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டு […]
குறைநிரப்பு: வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (19) அன்று அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்பித்திருந்தார். அதற்கமைய, வௌ்ளிக்கிழமை (19) மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், 500 பில்லியன் ரூபாய் […]
குளங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் குறித்து ஆராய்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் நடைபெற்றுள்ளது. கோட்டைகட்டிய குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை […]
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூசி நலம்: மியான்மர் அரசு பதில்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூசி, 80, கொல்லப்பட்டிருக்கலாம் என, அவருடைய மகன் சந்தேகம் தெரிவித்த நிலையில், ராணுவ அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இதனால் அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்ட […]
தமிழ்த் தேசியப் பேரவையினர் ஸ்டாலினுடன் சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். சுமார் 1.00 மணி நேரம் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் இடம்பெற்றது. ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக […]
கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் முறையற்ற நியமனங்கள்?
கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் நேற்றைய தினம், அடையாள பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முத்துக்குமார் சுகிர்தன் தெரிவித்தார். நேற்று பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இன்று நாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். கிழக்குப் பல்கலைக்கழக […]