நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இன்று நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம். ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம் ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.   By C.G.Prashanthan

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

இலங்கையில் தற்போது நிலவி வரும் வடகீழ் பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ​இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை […]

மண்சரிவு: சாரதிகளுக்கு எச்சரிக்கை

கண்டி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி ஹந்தான-உடுவெல சாலையில் பல இடங்கள் நீரில் மூழ்கி மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர சாரதிகளை எச்சரித்துள்ளார். கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இந்த சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சாரதிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக இரவில் இந்த சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதால், சாரதிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு கண்டி மாவட்ட […]

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் […]

பக்ரைனில் இந்திய அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர்

பக்ரைனில் கடந்த 16-ந் திகதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர். ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை […]

ரூ. 50 கோடி கோரி கங்குலி வழக்கு

கொல்கத்தாவிற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கொல்கத்தா அர்ஜென்டினா ரசிகர் மன்றத்தின் தலைவர் உத்தம் சாஹா, சவுரவ் கங்குலி மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்காக, அவருக்கு எதிராக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கங்குலி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். தன் மீதானப் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், […]

2026 ஜனவரியில் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

வட இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பன்முக வர்த்தகக் கண்காட்சியான யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வானது. தொடர்ந்து 16 தடவையாகவும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளதுடன், 2026 ஜனவரி 23 முதல் 25 வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்பிராந்தியத்தில் மிகவும் நிலைபெற்றுள்ள வர்த்தக மேடையாக மாறியுள்ள இக்கண்காட்சி, வட மாகாணத்தின் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றி, வணிக தொடர்புகளை வளர்த்து, தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு […]

கனடா டொராண்டோ மகா விகாரையினால் நிதியுதவி!

சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால நிவாரணங்களை வழங்கும் திட்டத்திற்காக, கனடாவின் டொராண்டோ மகா விகாரையின் வழிகாட்டலில் அங்கு வாழும் ஸ்ரீலங்கா சமூகத்தினரின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட 20,000 டொலர் நிதி, இன்று ‘மருத்துவமனை சேவை சபையிடம்’ (Hospital Services council) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கனடாவின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய இராஜகீய பண்டித அஹங்கம ரத்தனசிறி நாயக்க தேரர், மருத்துவமனை சேவை சபையின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் மற்றும் […]

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு

பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ […]

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் நேற்று மாலை (18) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. By C.G.Prashanthan