இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, ‘டித்வா’ சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், அனர்த்ததினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் […]

நாயாறு பாலம் இலங்கை இராணுவ பொறியியலாளர்களால் புனரமைப்பு

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு – வெலியோயா, முல்லைத்தீவு – திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு – கொக்கிளாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான […]

சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார்!

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய […]

தரமற்ற மருந்துகள் இறக்குமதி; இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தத்தின் விளைவே!

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்துமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கோரியிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதன் பிரதிபலனாக இன்று பலவந்தமாக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அதனால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் […]

2026 முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்த நிலைமை ஏற்படக் கூடும்?

2026 முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்த நிலைமை ஏற்படக் கூடும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவ்வாறே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்களின் அடிப்படை பொறிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படக் கூடாது என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ரூபாவின் பெறுமதி 5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அண்மைய தரவுகளுக்கமைய வெளிநாட்டு […]

வெள்ளத்தில் மூழ்கிய களஞ்சியசாலைகள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும்

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள […]

ஜனாதிபதியிடமும் அரசியலமைப்புப் பேரவையிடமும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கோரிக்கை

அரச இயங்குகை மற்றும் பொதுநிதியின் உரியவாறான முகாமைத்துவம் என்பவற்றுக்குப் பொறுப்பாக விளங்கும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌவரத்தையும், சுயாதீனத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் அதற்குரிய நியமனத்தை மேற்கொள்ளுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியிடமும், அரசியலமைப்புப் பேரவையிடமும் வலியுறுத்தியுள்ளது. கணக்காய்வாளர் நியமனம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரச நிதி மற்றும் பொதுவளங்களை முகாமை செய்வதற்கான முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதுடன் நிறைவேற்றதிகாரத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் […]

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக் குற்றச் முகாம்களில் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில், பேங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. தாய்லாந்து அதிகாரிகளின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்துக்கான […]