கனடாவின் அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு குறித்து விசாரணை
கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force அந்த நாட்டில் நேரடி கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் டிடி வங்கிக்கு (TD Bank) விதிக்கப்பட்ட சாதனை அளவிலான 3 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆகியவற்றின் பின்னணியில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கை, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு […]
மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்றையதினம்(17) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உதவிபுரிந்தாலும் முழுநாட்டையும் கட்டியெழுப்ப முடியாது விவசாயம் மற்றும் பெருந்தெருக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு பலகோடி ரூபா தேவை அரசாங்கம் அன்பளிப்பு […]
இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது
மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் வேலை செய்யாத காரணத்தினால் பொலிஸாரால் சாரதி அனுமதிப்பத்திரம் பொறுப்பேற்கப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனைத் திரும்ப ஒப்படைக்க பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 3,200 ரூபாய் […]
இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?
சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தௌிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]
கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபருக்கு பிணை
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று (17) உத்தரவிட்டார். உதார நிர்மல் என்ற சந்தேகநபருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிம் கார்டுகளை (SIM Cards) வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, இவர் விளக்கமறியலில் […]
இந்தியா தென்னாப்பிரிக்க 4-வது டி-20 போட்டி இரத்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திரா ரேடேர்ஸ் நன்கொடை
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd 100 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை Indra Traders (Pvt) Ltd ஸ்தாபகர்/தலைவர் இந்திரா சில்வா, நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Indra Traders (Pvt) Ltd பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ருஷங்க சில்வா, ஹசீந்திர சில்வா மற்றும் பொது […]
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்தப் உத்தரவை வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற […]
மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்
கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் […]
அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் புறப்பட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட TK733 எனும் துருக்கி விமானம், நேற்று மாலை மீண்டும் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானம் 51 பயணிகளுடன் மாலை 5.41 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (16) கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதுகாப்பு கருதி மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது. […]