பருத்தித்துறை சென்ற கனரக வாகனம் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்து
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று சிறுப்பிட்டி பகுதியில் வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்த சம்பவம் வியாழக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்டதா என்பது தொடர்பாக […]
மானிப்பாய் பாதீடு அமர்வு சபையில் அமளி
மானிப்பாய் பிரதேச சபையின் பாதீடு அமர்வானது தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. பாதீடு மீதான கருத்துக்களின்போது தேசிய மக்கள் சக்தியினன் தவிசாளர் பக்கச்சார்வாக செயற்படுவதாகவும், வேறு பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர். அதன்பின்னர் 14 மேலதிக வாக்குகளால் பாதீடானது நிறைவேற்றப்பட்டது. பின்னர் சபையின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின்போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டினர். இதன்போது குறுக்கிட்ட […]
கன மழை; 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன
பெய்து வரும் கன மழையுடன் பசறை , பரப்பாவ, கஹவத்தை பகுதியில் நில விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர் கங்கானி சோமவீர வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பெண் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயம்
எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரிட்டிஷ் பெண் ஒருவர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கெதரின் எலிஸ் என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார். எல்ல 980 ஹோட்டலின் மீட்புக் குழுவினர் மற்றும் எல்ல பொலிஸார் இணைந்து குறித்த பெண்ணை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
‘கிரிஷ் நிறுவன ஒப்பந்தம்’ ; நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு
‘கிரிஷ் நிறுவன ஒப்பந்தம்’ தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகோடா முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (18) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக முந்தைய சந்தர்ப்பத்தில் கோரப்பட்ட பல ஆவணங்களை அரசு தரப்பு பிரதிவாதிக்கு வழங்கியது. கிரிஷ் […]
செம்பியன்பற்றுஇ தனிப்பனை பகுதியில் இளைஞன் தற்கொலை?
யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து: ஒருவர் படுகாயம்
காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவ்விளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) அன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் இந்த கத்தி குத்து தாக்குதலில் 25 வயதுடைய ஹைராத் நகரிலுள்ள அஸி அஸ்பாக என்ற இளைஞனே […]
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்
அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துக்குமாரண(S. C. Muthukumarana) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றிய ஜனக் மகேந்திரா, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சருமான முத்துக்குமாரண, சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் […]
யாழ்.பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை!
யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (17) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி உயர்வு
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவி, 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அந்த நிவாரணப் பொருட்களின் ஒரு பகுதியை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட சரக்கு விமானம் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. போயிங்-747-400 (Boeing-747-400) ரகத்தைச் சேர்ந்த இந்த பாரிய சரக்கு விமானம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் நிவாரணப் பொருட்களையே ஏற்றி […]