மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்
மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது. “பட்ஜெட் நிறைவேற்றப்பட்டமை, மக்களின் நம்பிக்கைக்கும், சபையின் பொறுப்புணர்ச்சிக்கும் கிடைத்த சான்றாகும். எதிர்வரும் காலப்பகுதியிலும் மஸ்கெலியா மக்களின் நலனுக்காக உறுதியுடன் செயல்படுவோம்” என தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார். வரவு –செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06 பேர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர், சுயேச்சை உறுப்பினர்கள் இருவர் என 10 […]
பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடு சுற்றறிக்கை வேண்டும் – நாமல் ராஜபக்ச
‘டித்வா’ பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை கணக்கிடுவது குறித்து ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கொடுக்கப்படும் இழப்பீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இழப்பீட்டைக் கணக்கிடும் முறையை அதிகாரிகளிடம் குறிப்பிடாமல் குறித்த தரப்பினரை குற்றம் சாட்டுவது பயனற்றது. இந்த நேரத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அளவுகோல்கள் குறித்து ஜனாதிபதியும், துறைக்குப் […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு […]
சூறாவளியை எதிர்கொள்ள முன்னாயத்தங்கள்; விசேட தெரிவுக்குழு நியமிக்கவும்
டித்வா சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்காக விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்தனர். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான பேரளிவாக கருதப்படும் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இன்னும் மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. ஆனால் இதுவரை நடந்துள்ள அனர்த்தங்களில் இந்த பேரனர்த்தம் முக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். இந்த […]
களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக சிறீதர்?
இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு வரையில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மேயில் இலங்கை அணிகளுக்கு 10 நாள்கள் களத்தடுப்புப் பயிற்சி முகாமொன்றை சிறீதர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. கட்டாரில் நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. இப்போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இரண்டு அணிகளும் சமநிலையில் காணப்பட்டதுடன், மேலதிக நேர முடிவிலும் அவ்வாறே காணப்பட்டிருந்தன. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிவிச்சா கவர்செலியா பெற்றதோடு, பிளெமெங்கோ சார்பாகப் […]
மீள இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை!
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட […]
பலம்வாய்ந்த நிலையில் அவுஸ்திரேலியா
அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் போராடி வருகின்ற போதிலும் இங்கிலாந்து மற்றொரு மோசமான முடிவை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் […]
யானையை தீயிட்டு கொன்ற மூவர் கைது
அம்பகஹவெல சந்தி பகுதியில் ‘அம்ப போ’ (Amba Bo) என்று கிராம மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட யானை மீது தீப்பந்தங்களை வீசி, அது உயிரிழக்கக் காரணமான மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், சீப்புக்குளம் பகுதியில் உள்ள அம்பகஹவெல சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் முற்றத்தில், கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ‘அம்ப போ’ என்ற யானை பலத்த தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 14ஆம் திகதி இரவு, […]
அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
பேரிடரினால் ஏற்படும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார். பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது. அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் உலக சுகாதார அமைப்பின் […]