‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – வடக்கு ஆளுநர்

எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும் நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் நிறுவுனர் தினமும், லேடி இராமநாதனின் உருவச்சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அம்பிகை சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே […]

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் […]

உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும் – தவெக தலைவர் விஜய்

”வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது,” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரசாரக் கூட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த […]

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கிய கடல் புறா?

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடற்படை தளத்தை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா, கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளத்திற்கு அருகில் நேற்று (டிசம்பர் 17) கண்டெடுக்கப்பட்டது. இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் […]

முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை

முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை; எல்லாமே 2008ம் ஆண்டு முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிடம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டில்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது. கடந்த 1971ல், நேருவின் வாரிசான, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான […]

திருப்பூர் போராட்டத்தில்,அண்ணாமலை கைது

குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கொட்ட, கோர்ட் அனுமதி வழங்கியது. குப்பையை பிரித்து கொட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குப்பையை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல்முறையீடு […]

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியவர் கைது

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியதாகக் கூறப்படும் நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வேவா வீதியைச் சேர்ந்த 39 வயது சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான கொரிய நாட்டவரான 27 வயதுடைய கிம் சிங் ஹியோங் மரவில அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளனவர் வென்னப்புவ, சார்லஸ் வில்லியம் மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் அருகிலுள்ள தேவாலயத்தில் கற்பித்து வந்துள்ளார். 16 ஆம் திகதி சந்தேக […]

தாராபுரம் பகுதியில் சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் ஒருவர் கைது!

மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 189,000 சிகரெட்டுகள், 33 லீற்றர் 600 மில்லிலீற்றர் பூச்சிக்கொல்லிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் புத்தளம் – பாலாவி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலன்னறுவையில் லொறிச் சாரதியின் சடலம் மீட்பு !

பொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை – தலுகானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், டிப்பர் லொறி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று 17 ஆம் திகதி மாலை, அவரது மனைவி தனது கணவர் வீடு திரும்பவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் […]

கைதாகிய பிள்ளையானின் சகா விடுதலை!

குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று புதன்கிழமை (17) காலை, கொழும்பில் இருந்து சென்ற குற்றவிசாரணைப் பிரிவு (சிஐடி) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர்   விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் […]